ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

தஞ்சாவூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

தஞ்சாவூரில் TNPSC Group-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை (12.10.22)) தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் TNPSC Group-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை (12.10.22)) தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் TNPSC Group-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை (12.10.22)) தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப்-2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூரில் நாளை (புதன் கிழமை) தொடங்கும் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் கூட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு, 2-ம் நிலை காவலர் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.யின் சர்வேயர் மற்றும் டிராப்ஸ்மேன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்விற்கான தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாக உள்ளன. எனவே முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதன்மை எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பயிற்சி வகுப்பினை சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு 7 அலகுத் தேர்வுகளும். 3 முழு மாதிரி தேர்வுகளும் ,அதற்கான மதிப்பீட்டு வகுப்புகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) தேர்விற்கான எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு முடிந்து, அதன் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேர்முக தேர்விற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

இந்த நேர்முக தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாதிரி நேர்முகத்தேர்வு வருகிற 13ஆம் தேதி இலவசமாக நடத்தப்பட்ட  உள்ளது. இந்த நேர்முகத்தேர்வானது காவல்துறை மற்றும் இதர துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படும்.

மேற்கண்ட தேர்விற்கு தயாராகும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் பதிவெண்ணை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது 04362-237037 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Group 2, Thanjavur, TNPSC