ஹோம் /தஞ்சாவூர் /

2 ஏக்கரில் மாதம் ரூ.1.20 லட்சம் வருமானம்.. திருவையாறு வெற்றிலைக்கு தனி மவுசு.. சாகுபடி முறை தெரிஞ்சுக்கலாம் வாங்க..

2 ஏக்கரில் மாதம் ரூ.1.20 லட்சம் வருமானம்.. திருவையாறு வெற்றிலைக்கு தனி மவுசு.. சாகுபடி முறை தெரிஞ்சுக்கலாம் வாங்க..

X
திருவையாறு

திருவையாறு வெற்றிலை

Tiruvaiyaru Betel : வெற்றிலை மற்றும் அதன் சாகுபடி முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

4 தலைமுறைகளாக வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர் தஞ்சை அடுத்த திருவையாறை சேர்ந்த குடும்பத்தினர். இதுபற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

வெற்றிலை என்றாலே தஞ்சாவூர் வெற்றிலை தான் அனைவரின் நினைவிற்கு வரும். அதில் முக்கியமாக கும்பகோணம் வெற்றிலை ஒன்றாகும். கும்பகோணம் அடுத்த திருவையாறு பகுதியில் வெற்றிலைக்கு அதிகளவிலான மவுசு இருக்கிறது. இந்த தஞ்சை மாவட்டங்களில் பல இடங்களில் விளையும் இந்த வெற்றிலையை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

வெற்றிலையின் கதை : 

தஞ்சாவூர் வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது. கொடி போல படர்வது. வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால் தான். வெற்றிலை என்று கூறுவதன் காரணத்தை தெரிந்து கொள்வோம். அனைத்து கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலை கொடி பூக்காது. காய்க்காது. உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும் தான். இதனால் தான் வெற்று இலை என்பது அதாவது வெறும் இலை என்று கூறப்பட்டு வந்தது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது என்கின்றனர்.

தஞ்சாவூர், கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் வெற்றிலை கொடிக்கால்கள் உள்ளன. வெற்றிலை சாகுபடி நடக்கிறது. அது என்ன வெற்றிலை இப்பகுதிகளில் மட்டும் வெற்றிலை இவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை.

இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கின்றனர். அதனால்தான் வெற்றிலை என்றாலே கும்பகோணம், திருவையாறு வெற்றிலை என்கின்றனர்.

இத்தனை வகைகள் இருக்கிறதா? :

வெற்றிலையில் 2 வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிக காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

திருவையாறு வெற்றிலை :

திருவையாறு அடுத்த ஆசனூர் கிராமத்தில் செபஸ்டின் ராஜ் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 4 தலைமுறைகளாக வெற்றிலை விவசாயத்தை செய்து வருகின்றனர். சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், ஒரத்தநாடு போன்ற தஞ்சை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், சிறு சிறு நகரங்களுக்கும் இவரது வெற்றிலை விற்பனை செய்யப்படுகிறது.

இவர்கள் செய்யும் வெற்றிலையின் வகை வெளிர் நிற வெற்றிலையாகும். பெரிய அளவில் இருக்கும் வெற்றிலைகள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கும், பெரிய அளவிலான வெற்றிலைகளை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற சிறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

எவ்வளவு லாபம் கிடைக்கிறது? :

இந்த வெற்றிலை விவசாயத்தில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். இது மிகவும் கடினமான தொழில் என்பதால் இதை செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். கூலி ஆட்களும் ஏற்கனவே பல ஆண்டுகள் அனுபவம் இருந்தால் மட்டுமே இதில் வேலை செய்ய முடியும் என்பதும் கசப்பான ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க : கம்ப்யூட்டரை இயக்க மவுஸ் வேண்டாம்..! கண் போதும்... பட்டுக்கோட்டை மாணவர்களின் அசத்தல் கண்டுப்பிடிப்பு..!

சுவாரஸ்ய தகவல்கள் :

வெற்றிலை பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். மலேசியாவில் தோன்றிய இச்செடி, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற மற்ற நாடுகளில் வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பணத்தை ஈட்டி தரும் தாவரமாகவும் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னென்ன பயன்கள்? : 

அப்படி என்னதான் இந்த வெற்றிலையில் இருக்கு. நீர்ச்சத்து - 84.4%, புரத சத்து - 3.1%, கொழுப்பு சத்து - 0.8%, கலோரி அளவு - 44, இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், நியாசின், ரிபோபிளேவின், வைட்டமின் - C ஆகியவை இருக்காம். சமீபத்திய ஆய்வில் சவிக்கால் என்னும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு பொருள் வெற்றிலையில் மிக அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சவிக்கால் கிருமிகளை கொள்ளும் ஆற்றல் மிக்கது.

நம் உடம்பிற்கு இந்த வெற்றிலை செய்யும் நல்ல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புற்றுநோய், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு, அல்சர், தேள்கடிக்கு, தாய்ப்பால் சுரக்க, தலைவலி நீங்க, கபம், சளி, நோய்தொற்று, ஆஸ்த்துமா, மூட்டுவலி, ரத்த அழுத்தம், தொண்டைப்புண் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம் உடம்பை பாதுகாக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெற்றிலை சாகுபடி ஆனது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தாலும், சாகுபடி செய்யும் வெற்றிலைகளை அறுவடை செய்வதற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பதே வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கருத்தாக இருந்து வருகிறது.

First published:

Tags: Agriculture, Local News, Tanjore