ஹோம் /தஞ்சாவூர் /

தியாகராஜர் ஆராதனை விழா - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தியாகராஜர் ஆராதனை விழா - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தியாகராஜர் ஆராதனை விழா

தியாகராஜர் ஆராதனை விழா

Thanjavur District | தியாகராஜர் ஆராதனை விழா வரும் 11ஆம் தேதி (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தியாகராஜர் ஆராதனை விழா வரும் 11ஆம் தேதி (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரானதியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கே அவரது சமாதி இருக்கிறது.

இங்கே ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜா சுவாமிகளின் 176ஆவது ஆராதனை விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் நிறைவு நாளான ஜனவரி 11ஆம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்நிலையில், 11ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் வடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா வருகிற 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 21.1.2023 (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur