ஹோம் /தஞ்சாவூர் /

துணிவு FDFS ரிவ்யூ.. “மைக்கேல் ஜாக்சனாவே அஜித் மாறிட்டாரு” - தஞ்சை ரசிகர்களின் ரீயாக்‌ஷன்..

துணிவு FDFS ரிவ்யூ.. “மைக்கேல் ஜாக்சனாவே அஜித் மாறிட்டாரு” - தஞ்சை ரசிகர்களின் ரீயாக்‌ஷன்..

X
அஜித்தின்

அஜித்தின் துணிவு

Thunivu FDFS Review | தஞ்சை ஜிவி ஸ்டூடியோவில் துணிவு படம் வெளியான நிலையில் தஞ்சையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வான வேடிக்கைகள், பட்டாசுகள், மேல தாளங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள துணிவு படம் இன்று வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் துணிவு பட முதல் காட்சியை கொண்டாடிய மகிழ்ந்த நிலையில் படம் எதிர்பார்த்தது போல் வந்துள்ளது என ரசிகர்கள் பெறும் உற்சாகத்தில் பொங்கியுள்ளனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்

இந்த படம் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

GV studio 
தஞ்சாவூர் GV studio

இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் வெளியானது. இந்த ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. அதனை தொடர்ந்து பெறும் எதிர்பார்ப்பில் படம் இன்று நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது

படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிகர்கள் முதல் பட காட்சியில் கொண்டாட்டத்தில் மாஸ் காட்டியுள்ளனர் தஞ்சை ஜிவி ஸ்டூடியோவில் துணிவு படம் வெளியான நிலையில் தஞ்சையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வான வேடிக்கைகள், பட்டாசுகள், மேல தாளங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்...

வங்கியில் பணத்தை கொள்ளையடிப்பை மைய கதையாக உள்ள நிலையில் படம் முழுவதும் பணத்தை காட்டியுள்ளார்கள் டிஃபரண்டான லுக்கில் அஜித் மாஸ் காட்டிய நிலையில் முதல் பஸ் ஸ்டாப் முழுவதும் பேங்கில் பணத்தை கொள்ளை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது...

முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் செகண்ட் ஆஃபில்தான் எதிர்பாராத கிறிஸ்டிகள் அதிகம் உள்ளது படம் முழுவதும் நிறைந்து இருக்கிறது...

இரண்டாவது பாதியில் ஒரு நல்ல கருத்தை சொல்லி படத்தை முடித்துள்ளார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.. மேலும் ரசிகர்கள் கூறுகையில்: தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு சண்டை காட்சிகள் இருந்தது இல்லை எனவும் படம் எதிர்பார்த்ததை விட பயங்கரமாக இருக்கிறது எனவும் படத்தில் முழுவதும் டிவிஸ்ட் உள்ளது எனவும் படத்தில் செகண்ட் ஆப் எதிர்பாராததை கொடுத்ததாகவும் பட்டத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்....

First published:

Tags: Actor Ajith, Ajith, Cinema, Local News, Thanjavur, Thunivu