ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் கனமழையால் வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் கனமழையால் வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் - விவசாயிகள் வேதனை

கனமழையால்

கனமழையால் சாய்ந்துள்ள கரும்புகள்

Tanjore District News : கன மழையால் 5000 -க்கும் மேற்பட்ட கரும்புகள் விளைநிலத்தில் சாய்ந்ததால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கரும்பு விவசாயிகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதிகளில் பல ஏக்கரில் விதைக்கப்பட்ட கறும்புகள் நேற்று பெய்த கன மழையால் வேரோடு விளைநிலங்களில் சாந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “பொங்கலுக்காக இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி வந்த கரும்புகள் நேற்று பெய்த கன மழையால் வெறோடு சாய்ந்துள்ளது. பிள்ளையைபோல் வளர்த்து வந்த கரும்புகள் எங்கள் கண்முன்னே சாய்ந்தது கடும் வேதனையாக இருக்கிறது.

இதையும் படிங்க : சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்.. தஞ்சை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் கிட்டத்தட்ட 1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஒரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் அடுத்தடுத்து பெய்யும் மழைக்கு என்ன ஆக போகிறது” என்ன கவலை அடைந்துள்ளனர்.

மேலும் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை பொருத்த வரையில் பல ஏக்கரில் சாகுபடிக்காக இருந்த 5000க்கும் மேற்பட்ட கருப்புகள் அதிக தரை காற்றுடன் கூடிய கன மழையால் வேரோடு விளைநிலங்களில் சார்ந்து விட்டது. இதனால் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore