முகப்பு /தஞ்சாவூர் /

கயிறு மூலம் கடற்பாசி வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

கயிறு மூலம் கடற்பாசி வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Thanjavur News : தஞ்சாவூர் மாவட்டத்தில், கயிறு மூலமாக கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Thanjavur, India

கயிறு மூலமாக கடற்பாசி வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, “தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 2022-23ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயிறு மூலமாக கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 1 பயனாளிக்கு 2 அலகு வீதம் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின்படி 1 அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.8000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே தஞ்சாவூர் மாவட்டமானது கடற்பாசி வளர்ப்பிற்கு உகந்த பகுதியாக அமைந்துள்ளதால் மீனவ மகளிரின் மாற்று வாழ்வாதாரமாக கடல்பாசி வளர்ப்பு மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் அலுவலகங்களை (தொலைபேசி எண் - 9952226545, 7339349630 ) நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur