ஹோம் /தஞ்சாவூர் /

இது டைம் ட்ராவலா..? பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் தஞ்சாவூர் அரண்மனை தர்பார் ஹால்!

இது டைம் ட்ராவலா..? பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் தஞ்சாவூர் அரண்மனை தர்பார் ஹால்!

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரண்மனை தர்பார் ஹால்

Tanjore News : பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தஞ்சாவூர் மராட்டிய அரண்மனை. 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் என்றாலே தொன்மையின் அடையாளமாக திகழும் தமிழகத்தின் ஒரு முக்கியமான மாவட்டமாகும். தஞ்சாவூரில் பழமையான எண்ணற்ற வகையான இடங்கள் இருக்கிறது. அதில்தஞ்சை மராட்டிய அரண்மனையும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த அரண்மனைக்குள் சென்றால் 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதைபோல பிரமிப்பான உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு இந்த அரண்மனைக்குள் எண்ணற்ற வகையான பொக்கிஷங்கள் இருக்கிறது.

அரண்மனையின் வரலாறு:

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அரண்மனை, 75 விழுக்காடு இன்றளவும் அழியாமல் இருக்கிறது. இந்த அரண்மனை வளாகத்தில் தர்பார் மண்டபம்,அருங்காட்சியகம், கலைக்கூடம், சரஸ்வதி மஹால், மணிமண்டபம்,சங்கீத மகால் என 6 பகுதிகளாக காணப்படுகிறது. அதில் பிரமிக்க வைக்கும் சுதை சிற்பங்களுடன் காணப்படும் தர்பார் மண்டபத்தை பற்றி பின்வருமாறு காணலாம்:

தர்பார் மண்டபம்:

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த தர்பார் மண்டபமானது அக்காலத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கும் , முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கும் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் சொல்கிறது.

இதையும் படிங்க : தஞ்சையில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய‌ 85 வயது முதியவர் கைது

இந்த தர்பார் மண்டபம் ஆனது முன்பகுதி திறந்த வெளியாகவும் மற்ற மூன்று பகுதிகளும் அடைக்கப்பட்டு மிகவும் பிரம்மிக்க வைக்கும் முறையில் காட்சியளிக்கிறது.

இந்த மண்டபத்தின் மையப்பகுதியில் மன்னர் அமர்ந்து தீர்ப்பு வழங்க சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 46 தூண்கள் கொண்ட இந்த தர்பார் மண்டபமானது, இந்து கடவுள்களான சிவன்‌, விஷ்ணு, இந்திரன் இவர்களது தேவியர்களுடன்‌ காட்சியளிக்கும் சுதைசிற்பங்களும் மற்றும் தஞ்சை ஓவியங்களுடன் கூடிய மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.

இந்த தர்பார் மண்டபத்தில் ஆரம்பத்தில் இருந்த நாயக்கர்களின் ஓவியங்களும் அதன் பிறகு வந்த மராட்டியர்களின் ஓவியங்களும் ஒன்றோடு ஒன்று மேலே கலந்து மிக அழகான முறையில் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இந்த தர்பார் மண்டபத்தில் மேற்புறத்தில் இருக்கும் ஒரு அமைப்பானது இது வரை பார்த்த பிரமாண்டத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு நீண்ட தூரம் சென்று மிகவும் நுணுக்கமான கலையுடன் காணப்படுகிறது.

இதையும் படிங்க : கரண்ட் பில் கட்டலைன்னா மின்சாரம் துண்டிப்பா... மின்சார வாரியம் விளக்கம்

பார்ப்பவர்களுக்கு கழுத்து வழி கூட தெரியாமல் இருக்கும் வகையில் ஓவியங்களாளும், பிரமிக்க வைக்கும் கட்டிட கலையினாலும் சுதை சிற்பங்களாலும் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது.

மேலும், இந்த தர்பார் மண்டபத்திற்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூண்களைக் கொண்டு தமிழ் கடவுள்களின் உருவச்சிலைகள் தமிழகத்தின் கோயில்களில் இருக்கும் சிலைகள் அவை எந்த கோயில் என்ற விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் என 40க்கும் மேற்பட்ட உருவச்சிலைகள் இந்த மண்டபத்தில் காணப்படுகிறது.

இவ்வளவு அழகையும் பிரமாண்டத்தையும் பார்க்கும்போது 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்கின்றனர் இங்கு வரும் சுற்றுலா பிரியர்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore