ஹோம் /தஞ்சாவூர் /

20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை.. தஞ்சாவூர் திருவள்ளூர் நகரில் சாலைக்காக ஏங்கும் மக்கள்..

20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை.. தஞ்சாவூர் திருவள்ளூர் நகரில் சாலைக்காக ஏங்கும் மக்கள்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர் வல்லம் மின் நகர்

Thanjavur District News | 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் நகரவாசிகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் வல்லம் மின் நகர் அருகே திருவள்ளூர் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளுவர் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே சாலை அமைக்கப்படாததால் இப்பகுதி மக்கள் மண் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி நகர் முழுவதும் குளம் போல் ஆகி விடுவதால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு சென்றுவருவோர், தெருக்களில் வரும் போது கடும் சிரமமாக உள்ளது. இன்னும் பல அதிக அளவில் பள்ளம் உள்ளதால் மழை நீர் பள்ளங்களில் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாலை வழுக்கலாக இருப்பதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:

எத்தனையோ முறை கவுன்சிலரிடமும் கூறினோம். மனுக்களும் கொடுத்துள்ளோம்.  ஆனால் கவுன்சிலர் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. பள்ளி குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் தெரியாமல் வெளியே வரும்போது பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் மாட்டிக் கொள்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்கள் கூட வருவது மிகவும் சிரமமாக உள்ளது திருவள்ளுவர் நகர் முழுவதுமாக இந்த பிரச்சனை தான் உள்ளது. எந்த இடத்திலும் ஒரு சாலை கூட இல்லை இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிக்குள்ளாகி வருகிறோம் தயவு செய்து எங்களுக்கு சாலை வசதி அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur