ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை- உங்கள் ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் தடை- உங்கள் ஊர் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

மின் தடை

மின் தடை

Thanjavur Power cut areas | தஞ்சாவூர் மாவட்டத்தில், நாளை (செவ்வாய் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thanjavur, India

  தஞ்சாவூர் மாவட்டத்தில், செவ்வாய் கிழமை (நவம்பர் 8) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

  இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

  Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

  பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும், கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

  தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர் ஆகிய பகுதிகள்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  திலகர் திடல் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம் ஆகிய பகுதிகளிலும், வண்டிக்கார தெரு மின்பாதையில் மின்வினியோகம் பெறும் ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர் நோம்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைபிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய பகுதிகளிலும், சர்க்யூட் ஹவுஸ் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜி.ஏ.கெனல் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur