ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மாநகர் பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது

தஞ்சை மாநகர் பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது

குடிநீர் 

குடிநீர் 

Thanjavur Water Supply | பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாநகர் பகுதிகளல் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

குடிநீர் வினியோகம் நிறுத்தம் தொடர்பாக, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குடிநீர் குழாய் திருமானூர் சோதனைச்சாவடி அருகில் பழுதடைந்துள்ளதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் 1ஆவது வார்டு முதல் 51ஆவது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur