ஹோம் /தஞ்சாவூர் /

படகு விடப்படும் என அறிவிக்கப்பட்ட அகழியில் கழிவுநீர் ஒடும் அவலம்.. கண்டுகொள்ளுமா தஞ்சை மாநகராட்சி? 

படகு விடப்படும் என அறிவிக்கப்பட்ட அகழியில் கழிவுநீர் ஒடும் அவலம்.. கண்டுகொள்ளுமா தஞ்சை மாநகராட்சி? 

தஞ்சை

தஞ்சை

Thanjavur Trench | தஞ்சை மாநகரில்  நான்கு ரத வீதிகளை சுற்றிலும் மன்னர்கள் காலத்தில் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக வெட்டப்பட்ட அகழிகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சை பெரியகோவில் பின்புறம் சீனிவாசபுரத்தில் இருந்து தென்கீழ் அலங்கம் வரை அகழி உள்ளது.  இந்த அகழியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அகழியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை அகழிகள்:

தஞ்சை மாநகரில்  நான்கு ரத வீதிகளை சுற்றிலும் மன்னர்கள் காலத்தில் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக வெட்டப்பட்ட அகழிகள் உள்ளன. இந்த அகழிகள் மழைநீர் மற்றும் கல்லணை கால்வாய் தண்ணீரால் நிரம் பும். இதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

ஒரு காலத்தில் அகழியில் சுத்தமான தண்ணீர் சென்றது. தண்ணீரை கால்நடை கள் குடித்தன. கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு அகழி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் படிக்க:  மராட்டிய மன்னர் மனதை கவர்ந்த தஞ்சை ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

நாளடைவில் அகழியில் கழிவுநீர் தேங்க தொடங்கியது. வீடு, கடைகள் பெருக, பெருக அகழியில் கழிவுநீர் கலப்பதும் அதிகரித்தது. தற்போது குப்பைகள், கழிவுநீர் தேங்கும் இடமாகவே அகழி மாறி விட்டது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது.

கழிவுநீர் கால்வாயாக காட்சி தரும் அகழி

அகழியில் படகு சேவை:

இந்த அகழியை சுத்தம் செய்து படகு சேவை தொடங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தும் அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.

மாணவர்கள் பாதிப்பு:

அந்தவகையில் தஞ்சை தென்கீழ் அலங் கம் பகுதியில் உள்ள அகழியிலும் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த அகழி அருகே தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தெடக்கப்பள்ளி என 2 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளிகளி லும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க:  பித்ரு தோஷம் நீங்க தஞ்சாவூரில் வழிபட வேண்டிய கோவில்

இந்த பள்ளிகளின் வகுப்பறை, கட்டிடத்தின் ஜன்னல் பகுதி அகழி பகுதியையொட்டி உ உள்ளது. இதனால் துர்நாற்றம் வகுப்பறைக்குள்ளும் வீசுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்களும் அதிக அள வில் உற்பத்தியாகி மாணவ, மாணவிகளை கடிக்கிறது.

அகழியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன

இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே பள்ளியையொட்டியுள்ள பகுதிகளில் கழி வுநீர் தேங்குவதை தடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், “இந்த பாலம் அருகில் கடந்து செல்லும் போதெல்லாம் துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது. தாங்க முடியவில்லை, அருகிலேயே பள்ளி, கடைகள் என அனைத்தும் உள்ளன. ஒவ்வொரு நாளும் இதை கடக்க முடியாமல் அனைவரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். தயவு செய்து மாநகராட்சி இதை விரைந்து சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வழியுறுத்துகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur