ஹோம் /தஞ்சாவூர் /

கால்கள் உடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி.. யார் தலையில் விழப்போகுதோ என்ற அச்சத்தில் தெக்கூர் மக்கள்

கால்கள் உடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி.. யார் தலையில் விழப்போகுதோ என்ற அச்சத்தில் தெக்கூர் மக்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - தெக்கூர் கிராம மேல்நிலை நீர்தேக்க தொட்டி

Thanjavur Thekkur Village | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் 1992ல் கட்டப்பட்ட 30,000 லிட்டர் அளவுள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 30,000 லிட்டர் அளவுள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி இருக்கிறது. 1992ல் கட்டப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இதில் முக்கியமாக தண்ணீர் தொட்டியில் உள்ள நான்கு பில்லர்களில் மூன்று பில்லர்களில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து உள்ளது.

இதனால் தண்ணீர் தொட்டி எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே நாட்களை கடந்து வருகின்றனர்.

மேலும் தண்ணீர் தொட்டி அபாய நிலையில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.. அதிக அழுத்தம் இருக்கும் என்பதால் கீழே உடைந்து விழ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் .. மின்சாரம் இருக்கும் போது மட்டுமே தண்ணீர் பயண்படுத்த வேண்டியுள்ளது... இதனால் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது.

மேலும் படிக்க:  247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இது குறித்து உப்புண்டார்பட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், “பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். நிதி பற்றாக்குறை இருக்கிறது என்று பதில் கூறினார்கள். புதிய தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் இது வரையிலும் தெரிவிக்கவில்லை. மேலும் பழுதடைந்த பில்லர்களை மட்டும் சரி செய்ய உள்ளதாகவும் கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur