ஒரத்தநாட்டை அடுத்த தெக்கூர் குலாலர் தெருவில் மன் பாண்ட தொழில் செய்து வரும் பல குடும்பங்கள் பானை,சட்டி அடுப்பு போன்ற பொங்கலுக்கு தேவையான மன் பான்டங்களை தயார் செய்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை மற்றும் சூரியனை கடவுளாக வழிபடும் திருநாள் தான் தை பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வழக்கமாக 4 நாட்கள் அடங்கிய திருவிழாவாகும் போகிப் பொங்கல், சூரியப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் மற்றும் நான்காம் நாளை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை அன்று கோலம், கரும்பு, மஞ்சள் கொத்து போன்ற பல பொருட்கள் அடங்கும் அதில் முக்கியமாக பொங்கல் பானையை சொல்லலாம். சூரியனை காலையில் வழிபட்டு வீட்டு வாசலில் பொங்கல் வைத்து படைத்து மகிழ்ந்து உண்ணுவது வழக்கம்.
இப்படி பார்த்து பார்த்து ரசித்து கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பானை முக்கியமான ஒன்றாகும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பொங்கல் பானைகளை பானை தொழிலாளர்கள் தயாரிப்பதில் மும்மரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் ஒரத்தநாட்டை அடுத்த தெக்குர் குலாலர் தெருவில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அதிக அளவிலான பொங்கல் பானைகளை தயாரித்து வருகின்றனர். இதில் மண் பானை, மண் அடுப்பு, மண்சட்டி, மண் கலையம் போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழிலை செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மண் பானைகள் மற்றும், சட்டிகளை தயார் செய்ய தொடங்கினோம். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி பல பானை சட்டிகள், அடுப்பு போன்றவைகளை மும்மரமாக தயாரித்து வருகிறோம். இதில் பல பானைகள் விற்பனைக்கும் அனுப்பியுள்ளோம். பானைகள் எங்களிடம் வியாபாரிகள் வந்து நேரடியாக வாங்கி இருக்கின்றனர்.
பானைகள் முந்தைய காலத்தை விட தற்போது பொதுமக்கள் வாங்குவது குறைந்தே காணப்படுகிறது. எங்களுக்கு இத்தொழிலில் பெரிதளவில் லாபம் இல்லை என்றாலும் பரம்பரை தொழில் என்பதால் இதை செய்து வருகிறோம் ஆண்டுகள் ஆக ஆக இதனுடைய மதிப்பும் குறைந்ததாகவே காணப்படுகிறது.
ஆண்டுதோறும் அலுமினிய பாத்திரத்தில் சமைத்து உடலை கெடுத்து வரும் பொதுமக்கள் ஒரு நாளாவது நம் பாரம்பரிய மண்பானையை வாங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தவறு இல்லை. ஆனால் பலர் இந்த தவறை செய்கின்றனர் இது தொடர்ந்தும் வருகிறது. மண்பானைகள் முந்தைய காலத்தை விட வாங்குபவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். இதை அரசு ஏற்று மண்பானைகளை எங்களிடம் மொத்தமாக வாங்கி பொதுமக்களுக்கு கொடுத்தால் எங்கள் தொழில் இன்னும் பல ஆண்டுகள் வாழும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Clay Pot, Local News, Pongal festival, Tamil News, Thanjavur