கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை ஓய்ந்தாலும் விளக்குகளை காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
கார்த்திகை தீப திருவிழா இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடு களில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம்.
இதுபோல் கோவில்களிலும் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர். அகல் விளக்கு என் பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும்.
இது பொதுவாக களி மண்ணால் செய்யப்பட்டு, பருத்தி திரியால், நெய் அல்லது நல்லெண்ணை கொண்டு எரியூட்டப்படும். விளக்கேற்றுவதால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.
அகல்விளக்கு தயாரிக்கும் பணி இப்படி சிறப்பு வாய்ந்த தீபத்திருவிழாவையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன்கோவில் சாலை சாலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது மழை ஓய்ந்ததால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அகல்விளக்கு தயாரிப்பதற்காக முதலில் மண்ணை வெயிலில் உலர்த்துகிறார்கள். அதன்பின்னர் தேவையான தண்ணீர் மற்றும் மணல் கலந்து பக்குவப்படுத்துகிறார்கள், பிறகு அந்த மண்ணை மின்சாரத்தில் சுற்றும் இயந்திரத்தில் இட்டு, ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் அகல் விளக்கை வடிவமைக்கி றார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயி லில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.
இப்பகுதியில் தயாரிக்கப்படும் அகல்விளக்கு 8 தஞ்சை மட்டுமின்றி பிற ஊர்களுக்கும் அனுப்பி வைக் கப்படுகின்றன. தற்போது மழை பெய்து ஓய்ந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் திரள்வதாலும், பனி மூட்ட மாக இருப்பதாலும் அகல்விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.
மேலும் அகல்விளக்குகளை தீயில் சுடுவதற்கு தேவை யான வைக்கோல், தென்னை மட்டை, கீற்றுகளும் மழையில் நனைந்ததை காய வைக்க முடியவில்லை. இதனால் 7 நாட்களில் முடிய வேண்டிய பணி கூடுதல் நாட்கள் ஆகிறது.
இதுகுறித்து தஞ்சையை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சுப்ரமணியன் கூறுகையில்: “நாங்கள் தலைமுறை தலைமுறையாக அகல் விளக்குகளை செய்து வருகிறோம். இந்த ஆண்டு 3 லட்சம் விளக்குகள் செய்ய இலக்குகளை வைத்தோம் ஆனால் மழை காரணமாக சரியாக செய்ய முடியவில்லை.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா இருந்தால் இந்த ஆண்டு பொதுமக்கள் அதிக அளவில் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்து பொங்கல் வர இருப்பதால் அதற்கான பானைகளும் ஏற்கனவே செய்து வைத்துள்ளோம். அடுத்த மாதம் செய்யவும் உள்ளோம்” என்று கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore