தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்டவற்றின் வரிசையில் தஞ்சாவூர் மரக்குதிரையும் பிரபலம்.இருபதாம் நூற்றாண்டு வரை சின்னக் குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்களில் ஒன்றாக இருந்தது இந்த மரக்குதிரை.ஆனால், நவீன நுகர்வு கலாசாரம் காரணமாக, மரக்குதிரை என்பது, இன்றைய இளைய தலைமுறையின் கண்களில் அவ்வளவாக படுவதில்லை.
ஒரு காலத்தில் பாரம்பரியமிக்க இந்த மரக்குதிரை தயாரிப்பு, தஞ்சாவூரில் அதிகமாக இருந்தது. எனவே, இதற்கு ‘தஞ்சாவூர் மரக்குதிரை’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஆனால், காலப்போக்கில் இதைச் செய்வதற்கு போதியஆள் இல்லை.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரே கடை நடத்தியவர்பூக்காரத்தெருவைச் சேர்ந்த ஜெ.புஷ்பலதா. இவர், மரக்குதிரை தயாரித்து விற்கும்தொழிலை 1980-களில் தொடங்கினார். இதற்காகத் தச்சு வேலை தெரிந்த கூலித் தொழிலாளியை வேலைக்கு நியமித்து, மரக்குதிரையைத் தயாரித்து வந்தார். இதற்கென நிறைய ஆர்டர்கள் கிடைத்திருந்த நிலையில், அந்த தொழிலாளி திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். ஆர்டர் கொடுத்தவர்கள் நெருக்கடி தர, புஷ்பலதாவே மரக்குதிரையை உருவாக்கத் தொடங்கினார். மேலும் கடந்த ஆண்டு இவருடைய கனவர் இறந்த நிலையில் அதில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் சில மாதங்கள் இத்தொழிலுக்கு விடுப்பு கொடுத்தார். ஆனால் முழுவதுமாக இதை நிறுத்த முடியவில்லை.
தன் பிள்ளைகள் இத்தொழிலை தொடர வேண்டாம் என்று சொல்லியும் இதை செய்யும் போதெல்லாம், இவருடைய கனவர் கூடையே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால் தனி ஒரு சிங்கபெண்ணாகதன்னம்பிக்கையை இழக்காமல் இத்தொழிலும் அழிந்து விட கூடாது என்பதற்காக மரக்குதிரைகளை செதுக்கி விற்பனையில் கலக்கி வருகிறார்.
இது குறித்து பேசிய அவர், "என்னுடைய கணவரின் இறப்பை என்னால் மறக்க முடியவில்லை. என் கனவரின் ஆசை இத்தொழிலை அழிய விடமாமல் பலருக்கு கற்று கொடுத்து தொடர வேண்டும் என்பது தான், அதை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எனது ஆசையும். ஆனால், தற்போது இத்தொழில் செய்வதற்கு கூட கடை இல்லாமல் வீட்டிலையே தான் செய்து வருகிறேன்.
ரயிலடி நிலையம் அருகே இருந்த கடை ஸ்மார்ட் சிட்டி சீரமைப்பு பணிக்கா மாநகராட்சி கைப்பற்றியது..இதை மாமரத்தில்தான் செய்கிறோம். ஒரு குதிரை செய்வு செய்வதற்கு ஒரு நாளாகும் மரக்குதிரைக்கு ரூ.3000அன்னப் பறவைக்கு ரூ. 3500 வரை விற்பனை செய்கிறோம்.
எனக்கு தெரிந்து நாங்கள் மட்டுமே தஞ்சாவூர் மரக்குறிரையைச் செய்கிறோம். இது ரொம்ப நுணுக்கமான வேலை என்பதால், இத்தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு யாகும் முன்வருவதில்லை இத்தொழிலைத் தெரிந்தயர்களும் லாபம் குறைவு காரணமாக வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். நான் சிறு வயதில் இருந்தபோது, பணக்காரர்கள் வீட்டில்தான் மரக்குதிரைகள் இருக்கும்.
இதைக் குறைந்த விலைக்கு விற்பதால் இப்போது ஏழைகள், நடுத்தர மக்களும் வாங்கிச் செல்கின்றனர். இதை ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறோம். இந்த மரக்குதிரையில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விளையாடலாம். 35 கிலோ எடை வரை தாங்கும் மரக்குதிரையில் விளையாடுவதால், குழந்தைகளின் இதயம் பலமாகும். மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் விளையாடும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கும் முன்னேற்றம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
எனவே, தஞ்சாவூர் மக்கள் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி திருச்சி உள்பட பல மாவட்ட மக்களும் வாங்கிச் செல்கின்றனர் இதேபோல, இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.. இங்குள்ள மக்களும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தங்களது பிள்ளைகளுக்கு வாங்கி அனுப்புகின்றனர். மழலையர் பள்ளிகள், மனநலன் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளிலிருந்தும் மரக்குதிரைகள் நிறைய வாங்கிச் செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur