தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர்வடக்கு ஆதிதிராவிடர்தெருவில் மயானத்திற்கு செல்வதற்கு முறையான பாதை வசதியும் சாலை வசதியும்இல்லாமல் கிராம மக்கள் வயல்வெளிகளில் தடுமாறும் அவலம் நீண்ட காலமாக நீடித்துவருகிறது.
மயான சாலை:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில்ஒவ்வொரு முறையும் இறப்பின் போது இறந்தவர்களைஇடுகாட்டில் அடக்கம் செய்வதற்குள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பாச்சூர் வடக்கு தெருவில் காலம் காலமாக மயானமும் மயானத்திற்கு பாதை வசதியும் சாலை வசதியும் இல்லை.கிராமத்திற்கும் மயானம் இருக்கும் இடத்திற்கும் சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. இந்த இரண்டு கிலோமீட்டர் தூரமும் கருவேலமரங்களும் வயல்வெளிகளும் புல், செடி புதற்காடுகளுமாகவே இருக்கும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் உடல் நல குறைவால் காலமானார். இதனையடுத்து பாச்சூர் கிராம மக்கள் வழக்கம் போல் கருவேல மரங்களை அகற்றி உளுந்து விதைக்கப்பட்ட விளை நிலத்தின் வழியாக பிரேதத்தை தூக்கிச் சென்றனர்.
இதுகுறித்து பேசிய கிராம மக்கள், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்கள் ஒன்று கூடிமனு அளித்தோம்.அப்போது அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து அலுவலர் பார்வையிட்டார். பார்வை இடுவது மட்டும் தான் நடக்கிறது. யாரும் இதுவரை இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இறப்பவர்களை அடக்கம் செய்யமுறையான பாதை வசதியோ சாலை வசதியோ இல்லாமல் இருப்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில்பாச்சூர் வடக்கு தெரு கிராமத்தில் இருக்கும் ஒரு சில நில உரிமையாளர்கள், சாலை வரும் இடத்தில் தன்னுடைய சொந்த பட்டா நிலம் என்பதால் அதில் முள்வேலிகளை போட்டு தெருக்குசெல்லும் பாதைக்கு கூட வழி விடாமல் தடுக்கின்றனர்.
இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்துள்ளோம், செய்து தருகிறோம் என்று அவரும் பல முயற்சிகளையும் எடுத்து வருகிறா.ர் ஆனால் இதுவரை எதற்கும் நிரந்தர முடிவு கிடைக்காமல் இருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
தஞ்சை| மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனி செடிகள் வாங்கலாம்- தூய்மை பணியாளர்கள் நிர்வகிக்கும் நர்சரி
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அவல நிலையை எதிர்கொண்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை. தயவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur