தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் தஞ்சையில் பெரிய கோயிலிலும் சிவராத்திரி விழாவெகு விமரிசையாகநடைபெற்றது.
அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சிவராத்திரி விழாவில் மங்கல இசை திருமுறை விண்ணப்பம் கயிலாய வாத்தியம் தெருக்கூத்து நாத சங்கமம் பத்தி இசை பட்டிமன்றம் பறை இசை பரதநாட்டியம் குச்சிப்புடி காவடி கரகாட்டம் நையாண்டி மேளம் சிவன் சக்தி நாடகம் பக்தி இசை பாடல்கள் போன்ற பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மேற்பார்வையில் தஞ்சை திலகர் திடலிலும் பெரிய கோயில் வளாகத்திலும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரிய கோயிலில் சிவராத்திரியில் பொதுமக்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாடு செய்தும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர்.
இதில் முக்கியமாக பெரிய கோயில் வளாகத்தில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடத்தை விட்டு நகராமல் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Maha Shivaratri, Thanjavur, Thanjavur Temple