முகப்பு /தஞ்சாவூர் /

பெரிய ஓணான், பாம்பு - தஞ்சையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் மக்களை வியக்கவைத்த விலங்குகள்

பெரிய ஓணான், பாம்பு - தஞ்சையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் மக்களை வியக்கவைத்த விலங்குகள்

X
நாய்கள்

நாய்கள் கண்காட்சி

Thanjavur dog show | தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முறையாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாதா கோட்டையில் நடைபெற்ற இந்த நாய்கள் கண்காட்சியில் பெரிய ஓணான், பாம்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாதாக்கோட்டைப் பகுதியில் உள்ள மிருகவதைத் தடுப்பு சங்கத்தில், கால்நடைப் பாரம்பரிய துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நாய்கள் கண்காட்சியினை நடத்தினர். கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200 நாய்கள் பங்கேற்றன.

தொடர்ந்து கண்காட்சியில் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்பு, தனி திறன் போட்டிகள் நடைபெற்றன. அதில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

மேலும், இந்த கண்காட்சியில் அரிய வகை பறவைகள், பெரிய அளவிலான ஓணான், சிலந்தி, பாம்பு ஆகியவையும் இடம்பெற்றன. விழாவில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச் செல்வன், மிருகவதை தடுப்பு சங்க அலுவல் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், ஆசிப் அலி, விஜயலெட்சுமி பாரதி, சதீஷ்குமார், ரெட் கிராஸ் துணைத் தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் ரெத்தினகுமார், டிக்சன், ராபீன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதுகுறித்து பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர், ’பாரம்பரிய நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப்பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தும் விதமாகவும் நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன... அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தங்களின் செல்லப்பிரணிகளை பலரும் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு விதமான நாய்கள் இடம் பெற்று இருந்தது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் கண்காட்சி என்றார்.

First published:

Tags: Local News, Thanjavur