தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வட மாநில தொழிலாளர்களை அதிக அளவில் காண முடிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில பல குழுக்களாக பிரிந்து விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நடவு நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளது குறித்து பேசிய வடமாநில தொழிலாளர்கள், ‘நாங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து வருகிறோம். நாங்கள் தனியாக அங்கிருந்து வரவில்லை. எங்களுக்கு ஏஜென்ட் உள்ளார்கள். அதன்படி இந்த பாச்சூர் கிராமத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்.
நாங்கள் வந்து ஒரு மாதம் ஆகியுள்ளது. எங்களுக்கு ஒரு நாள் ரூ.500, ரூ.600, ரூ.700 என வேலைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும். நாங்கள் தங்குவதற்கு வயல் முதலாளிகள் எங்களுக்கு வசதி ஏற்படுத்தி தருகிறார்கள்.
உணவுக்கு வயல் முதலாளிகள் அரிசி, பால் போன்றவற்றை தருகிறார்கள். நாங்கள் 20 பேர் வந்துள்ளோம். எல்லாருமே எங்கள் உறவினர்கள் தான். நாங்கள் ஊருக்கு ஒரு வாரத்தில் சென்று விடுவோம். வேலை தொடங்கும்போது மறுபடியும் வருவோம்.
எங்க ஏஜென்ட் எங்களுக்கு கால் பன்னுவாரு. இந்த வேலையெல்லாம் எங்க ஊரில் கிடைக்காது. அங்கு ஒரு நாளைக்கு ரூ.200, ரூ.300 ஊதியம். இங்கு அதிகமாக கிடைக்கிறது. அதனால் அடுத்த முறையும் தொடர்ந்து வருவோம்’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்ளூர் தொழிலாளிகள் கூறுகையில், ‘இப்போதைக்கு பாவமாக இருக்கிறது. ஆனால் இது அதிகமானால் எங்களுடைய வாழ்வாதாரம் இழக்க நேரிடும். இதை நம்பி தான் பல குழுக்களில் கடன் வாங்கியுள்ளோம். எங்களுக்கு வேலை இல்லாமல் போனால் நாங்கள் எங்கே போவது.
நாம் இனி அவர்களை வளராமல் தடுக்க தான் வேண்டும். வயல் முதலாளிகள் அவர்களுக்கு கூலிகம்மியாக இருப்பதால் ஆதரவு தெரிவிக்கினறனர்’ என்று தெரிவித்தனர்.
நில உரிமையாளர்கள் கூறுகையில், ‘விவசாயத்தில் லாபம் பார்க்க முடியவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் பயன்படுத்தப்படும் இடுபொருட்கள் செலவு எல்லாம் போக ஒரு ஏக்கர் நிலத்தில் 10 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உள்ளூர் தொழிலாளிகளின் வேலையை குறை சொல்ல முடியாது. ஆனால் கூலி அதிகமாக தர வேண்டியுள்ளது. வட மாநில தொழிலாளிகள் குறைந்த அளவில் ஊதியம் பெறுவதால் வேறு வழியின்றி அவர்கள் கேட்பதால் ஒத்துக்கொண்டு இருக்கிறோம்" என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore