ஹோம் /தஞ்சாவூர் /

பொன்னியின் செல்வனுக்கு மரண வெயிட்டிங்... தீவிர ஆவலுடன் காத்திருக்கும் தஞ்சை இளைஞர்கள்

பொன்னியின் செல்வனுக்கு மரண வெயிட்டிங்... தீவிர ஆவலுடன் காத்திருக்கும் தஞ்சை இளைஞர்கள்

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் படத்தைக் காண தஞ்சை இளைஞர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பல கதாபாத்திரங்களைக் கொண்ட பிரமாண்ட நாவல். தற்போது அந்த நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படம், தமிழ் சினிமாவுக்கு முக்கிய படமாக இருக்கிறது.

தஞ்சையை கதையின் களமாக கொண்டிருக்கும் இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மீது தஞ்சை இளைஞர்கள் பெறும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய அவர்கள், ‘நம் தமிழர்களின் முக்கிய படமாக வெளிவர இருக்கிறது. மரண வெயிட்டிங்கில் உள்ளோம். கடந்த ஒரு மாத காலமாக பொன்னியின் செல்வன் Vibe-ல் தான் இருக்கிறோம். புத்தகங்களில் வார்த்தைகளாக மனத்திரையில் ஓடிய இந்த படத்தை தற்போது வெள்ளித் திரைக்கு கொண்டு வந்த மணி சார்க்கு‌ ரொம்ப நன்றி. நம் மண்ணை ஆண்ட சோழர்களை நாம் நேரில் பார்த்து இருக்க மாட்டோம். ஆனா 1,000 வருஷத்துக்கு முன்னாடி இந்த படம் நம்மல கொண்டு போக போகுது. சோழர்களை நேரில் பார்ப்பது போல் இருக்க போகிறது என்று மகிழ்ச்சியோடு எதிர்பார்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur