கல்செக்கு, மரச்செக்கு ஆகியவற்றில் தயார் செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அப்துல் ரவூப் பாரம்பரியத்தின் மேல் உள்ள அதீத காதலால் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை தனி தனி கல் மரச்செக்குகளில் உற்பத்தி செய்து பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகிறார்.
இதன் மூலம் மாதம் 1 லட்ச ரூபாய் வரை லாபம் பெற்று வருகிறார். இயற்கை விவசாயம் செய்து வரும் இவரிடம் இவரை பற்றியும் எண்ணெய் உற்பத்தி நிலையம் பற்றியும் கேட்டு அறிந்தோம்.
தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ரெட்டிபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரவூப், புவி நீரியல் தகவல் தொழில்நுட்ப பொறியாளரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். பின்பு தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான பின்பு அரசு தேர்வுக்கு படித்தும் வந்துள்ளார்.
தொடக்கத்திலேயே இவருக்கு இயற்கை விவசாயம், பாரம்பரியம் இவற்றின் மேல் அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இனி நமக்கு பிடித்த வேலையை செய்யலாம் என்ற எண்ணத்தில் படித்த படிப்பிற்கான வேலையையும் விட்டுவிட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பாரம்பரிய முறைப்படி கல்மர செக்கில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் தயாரிக்கத்தொடங்கினார். ஆர்டர் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் மாதம் 1 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘எண்ணெய்கள் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று கல் மரச் செக்குகளை தேடத் தொடங்கினார். தற்பொழுது இருக்கும் காலத்தில் கல் மரச்செக்கு கிடைப்பது பெரிதும் அரிதாக இருந்தும் ஒரு வழியாக 3 கல் மரச்செக்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து மூன்றாண்டு பெரும் முயற்சியில் கல்செக்கு அமைப்பை ஏற்படுத்தி நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.
எண்ணெய் உற்பத்தி நிலையம்:
834 சதுர அடி பரப்பளவில் எண்ணெய் உற்பத்தி நிலையம் அமைத்து, அதில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆட்டுவதற்கு தனித்தனியாக மரச் செக்குகளை அமைத்துள்ளார். இந்த ஒவ்வொரு செக்கும் 3 ஹெச்பி கியர் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கல் மரச்செக்கின் உலக்கை வாகை மரத்தைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது.
கடலை எண்ணெய்:
இதில் ஒரு நிமிடத்தில் 13 முறை சுற்றக்கூடிய கியர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு முறை 25 கிலோ வரையிலான கடலையை ஆட்டுகிறார்.
நல்லெண்ணெய்:
அதில் உள்ள உலகையும் வாகை மரத்தில் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுழலும் நிலையில் ஒரு முறை 45 லிருந்து 65 கிலோ வரையிலான எள்ளை இதில் ஆட்டுகிறார்.
தேங்காய் எண்ணெய்:
நாட்டு கருவேல மரத்தில் செய்த இந்த கல் மரத்தின் உலக்கை ஒரு நிமிடத்திற்கு 10 முறை சூழலும் நிலையில் 45 லிருந்து 60 கிலோ வரையிலான தேங்காய்களை இதில் ஆட்டுகிறார். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டும் இந்த கல் மரச்செக்கில் எண்ணெய்களை ஆட்டுகிறார். சூரிய ஒளி மூலம் எண்ணெய்களை வடிகட்டி டின் பாக்ஸில் விற்பனை செய்கிறார்.
ஆட்டிய எண்ணெய்களை பொதுமக்களிடம் நேரடியாகவும் இவர் வைத்திருக்கும் அங்காடியிலும் வைத்து விற்பனை செய்து வருகிறார். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 380-ரூபாய்க்கும், கடலெண்ணெய் 260 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் 250-ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்.
தஞ்சை பெரிய கோவிலில் 5 நாள்கள் நடைபெற்ற கலைநிகழ்ச்சி- மெய்மறந்து ரசித்த பொதுமக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur