தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டில் அடுத்த ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் நெருப்பு பிரதர்ஸின் புதிய வரவு அசுரன், ரோலக்ஸ், உட்பட 50 காளைகள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். இதை ஏறு தழுவுதல் என்றும் அழைப்பார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆண்டுதோறும் தை மாதம் தொடங்கும் இந்த ஜல்லிக்கட்டு விழா தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறும்.ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை தொந்தரவு செய்வதாக கூறி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இரண்டு ஆண்டுகள் நீடித்த தடையை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே திரண்டது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் திரண்டு மாநிலத்தை திணறவைத்தனர்.மெரினாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டதை நாம் யாராலும் மறக்க முடியாது. அதனையடுத்து, சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது.
இதையும் படிங்க : ஆதார் மோசடிகளைத் தவிர்க்க உடனே இதை செய்யுங்கள் - தஞ்சாவூர் மக்கள் கவனத்திற்கு...
பிறகு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில்ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை மாதத்தில் இருந்து தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காளைகளுக்குபயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் பல காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இதில் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் பலர் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.. ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த தீபன் குமார் என்ற இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய குழுவின் பெயர் நெருப்பு பிரதர்ஸ் ஆகும். இவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட காளைகளை வைத்திருக்கின்றனர்.
இதில் தீபன் குமார் என்ற இளைஞர் கால்பந்து போட்டியாளராக இருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவராக மாறியுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்ததீபன் குமார் தமிழ்நாடு அளவில் பல கால்பந்து போட்டிகளில் பங்கேற்று மிகச் சிறந்த போட்டியாளராக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால் அவருடைய காலில் அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து போட்டியில் விளையாடுவதை நிறுத்திக் கொண்டார்.
பின்பு 2017 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பிற்கு எதிரான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவரும் கலந்து கொண்ட நிலையில் அதிலிருந்து இவருக்கும் ஜல்லிக்கட்டு காளையின் மேல் அதீத பிரியம் வந்துள்ளது.
ஏற்கனவே பசு மாடுகள் இவர் வீட்டில் வளர்த்து வந்த இருந்த நிலையில் அதன் அனுபவத்தில் திருவையாறு மாவட்டத்தில் கொற்கை பண்ணையில் முதன் முதலாக உம்பலச்சேரி வகையை சேர்ந்த காளையை 17,000 ரூபாய்க்கு வாங்கிய நிலையில் அதற்கு பயிற்சி அளிக்க கற்றுக்கொண்டு பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார்.இவரின் காளை பிடிபடாதநிலையில் பின்பு தொடர்ந்து காளைகளை வளர்த்து வந்துள்ளார்.
தற்போது இவரிடம் ஐந்து காளைகள் உள்ளன.அந்த காளைகளின் பெயர்களை காணலாம். இவருடைய கொட்டத்தின் முதல் ஹீரோவான காளையின் பெயர் இரும்புதலை.புதிய வரவு ரோலக்ஸ்.மற்றொரு புது வரவு ஈஸ்வரன்,நான்காவது திரிசங்கு, ஐந்தாவது காளை அசுரன்.இதுபோன்று காளைகளுக்கு வீரம் காரமாக பெயர்களை வைத்து அடுத்தாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை களத்தில் இறக்க பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.
காளைகளை வளர்ப்பதன் மூலம் பெரிதளவில் வருமானம் இல்லை என்பதால் சொந்தமாக கயிறு கடையும் வைத்துள்ளார். இந்த கடையும் இந்த காளைகளுக்காகவே திறக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
அனல் பறக்க நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல இளைஞர்கள் இதுபோன்று காளைகளை களத்தில் இறக்க பயிற்சிகளை அளித்து வரும் நிலையில், போட்டியின் போது நடக்கும் சில காரசாரமான சண்டைகளால் நாம் ஒற்றுமையை இழக்க நேரிடும் என்ற அச்சமும் ஏற்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் பீட்டா போன்ற அமைப்புகள் எளிமையாக உள்ளே நுழைந்து நம் பாரம்பரியத்தை முடக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தீபன் குமார் போன்ற காளை வளர்ப்பில் ஈடுபடும் பல இளைஞர்களின் கருத்தாவும் இருந்து வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், ‘ஜல்லிக்கட்டில் என்னுடைய காளை களத்தில் நின்று சுத்தினால்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Tanjore