பெண்கள் இல்லாத துறையே இல்லை எனக் கூறலாம். ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். என்றாலும், சில கடினமான துறைகளுக்கு வர பெண்களிடையே தயக்கம் நிலவுகிறது.குடும்பம், சமூகச் சூழல் உள்ளிட்டவையே இதற்குக் காரணம்.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டோ ஓட்டுனர் வேலையைத் தேர்ந்தெடுத்த தஞ்சையைச் சேர்ந்த பெண்மணி தஞ்சையில் அசைக்கமுடியாத ஓட்டுனராக இருந்து வருகிறார்.
இவரைப்பற்றியும் இவரது 18 ஆண்டு கால அனுபவத்தை பற்றியும் தெரிந்துகொள்வோம்.தஞ்சையை சேர்ந்த பெண்மணி சுபத்ரா. இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டோ ஓட்டும் மற்ற பெண்னை பார்த்து இவருக்கும் அந்த ஆசை எழுந்துள்ளது.
பின்பு ஆட்டோ பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் தஞ்சை பெரிய கோயில் ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 18 ஆண்டுகளைகடந்த நிலையிலும் அதே தன்னம்பிக்கையுடன் சிங்க பெண்ணாக வலம் வருகிறார். கல்லூரி மற்றும் பள்ளியில் இவரது மகன்கள் படித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்த இறந்துவிட்டார்.தற்போது தனி ஆளாக குடும்பத்தையும் வேலையையும் பார்த்து வருகிறார்.
ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கை குறித்து பேசிய சுபத்ரா, ‘எனக்கு சொந்த ஊரே தஞ்சை என்பதால் எனக்கு எந்த வித பயமோ அச்சமோ இல்லை. பாதுகாப்பு அதிகம் இருக்கும். என் ஆட்டோவில் ஏறும் பயணிகள் பெண் ஓட்டும் ஆட்டோவில் சவாரி செய்கிறோம் என்று பெருமையாக நினைத்து பாராட்டுவார்கள்.
தஞ்சையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தனி ஆளாக தயார் செய்து வரும் பெண்மணி
பெரிய கோயில் ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டுவதால் ஓரளவிற்கு பயணிகள் ஏறுவார்கள். பள்ளி, கல்லூரி இல்லாத நேரத்தில் தான் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.ஒரு நாளைக்கு ரூ.500, 700, 1000 வரை கிடைக்கும். பெண்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றுஇவரிடம் அறிவுரை கேட்கும் பெண்களுக்குஊக்க ஊசியை போட்டு வருகிறார். எனக்குஆம்புலன்ஸ் ஓட்ட ஆசையும் உள்ளது என்றார்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur