முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் 110 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி!

தஞ்சையில் 110 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி!

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் வானிலை

Thanjavur weather report| தஞ்சையில் 110 டிகிரிக்கும் அதிகமான வெயில் சுட்டெரித்தது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவியதால் தஞ்சையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

தஞ்சையில் கடந்த கடந்த சித்திரை மாதத்தில் அடிக்கடி மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் பெரிதளவில் தெரியவில்லை, தற்போது வைகாசி மாதம் தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 110 டிகிரிக்கும் அதிகமான வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்‌. மேலும் வரும் நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் 110 டிகிரிக்கும் அதிகமான வெயிலின் வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Summer Heat, Thanjavur, Weather News in Tamil