ஹோம் /தஞ்சாவூர் /

கிராமத்துல மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடுவாங்க? தஞ்சை வடக்கூர் கிராமத்துக்கு ஒரு விசிட்..

கிராமத்துல மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடுவாங்க? தஞ்சை வடக்கூர் கிராமத்துக்கு ஒரு விசிட்..

X
பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம்

Thanjavur Maatu Pongal Celebration | தஞ்சை கிராமத்தில் வித்தியாசமான முறையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். அதுமட்டுமல்லாமல்விவசாயிகள் நேரடியாக பயன் பெறும் ஒரு பண்டிகையாகவும் இது காணப்படுகிறது.

தை மாதம் 1-ம் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகையானது 3தேதி வரை நடைபெறும். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டும். தமிழர்களின் பாரம்பரியத்தையும் உணர்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு கொண்டாடும் விழாவாக உள்ளது.

சூரியனை வழிபட்டு மாடுகளுக்கு மரியாதை செலுத்தி, பல பாரம்பரிய விளையாட்டுகளை நடத்திஆட்டம் பாட்டத்துடன் இந்த பொங்கல் விழாவானது நடைபெறும். குறிப்பாக கிராம பகுதிகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.

நேற்று முன்தினம் பொங்கல்ப ண்டிகை நடந்து முடிந்ததை தொடர்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திலும் நேற்று மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் நாடு, வடக்கூர்கிராமத்தில் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் கோலாகல பொங்கல்..

இந்த கிராமத்தில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலுக்குஎன்ன சிறப்பு என்றால் வடக்கூர் கிராம மக்களும் இந்த கிராமத்தை சுற்றியுள்ள 4 ஊர் நாட்டாமைகாரர்களும் வடக்கூர் கிராமத்தில் ஒன்று கூடிய பின்னர் கிராமத்தினருக்கும் நாட்டாமைகாரர்களுக்கும் பூச்செண்டு, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காலம் காலமாக இது போன்ற மாட்டு முறைகள் என்ற பெயரில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

First published:

Tags: Local News, Thanjavur