முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் பலி: மதுவில் சயனைடு: தற்கொலையா? கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் பலி: மதுவில் சயனைடு: தற்கொலையா? கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

மது குடித்து உயிரிழந்தவர்கள்

மது குடித்து உயிரிழந்தவர்கள்

Thanjavur Liquor Deaths : தஞ்சாவூரில் கள்ளச் சந்தையில் வாங்கிய மதுவை அருந்தி உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் மது அருந்தி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில், மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மீன் சந்தைக்கு ஏராளமானோர் வருவதால், டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பாரில் காலை 6 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு, காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.

அதே இடத்தில் கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும், மது குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சையில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், சட்டவிரோதமாக மது விற்ற பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பார் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா? - அண்ணாமலை

 இந்த நிலையில் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதில் உயிரிழந்த குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய 2 பேரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தனிப்படை போலீஸ்:

அதில் இருவரின் உடல்களிலும் சயனைடு இருப்பதும், அவர்கள் அருந்திய மதுவிலும் சயனைடு இருப்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கொலை செய்வதற்காக மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அல்லது சயனைடு கலந்த மதுவை குடித்து இருவரும் தற்கொலை மேற்கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    மேலும், உயிரிழந்த விவேக் மனைவி பிரிந்து வாழ்கிறார். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது எனவே குடும்ப பிரச்சினையால் தற்கொலையா அல்லது கொலையா என‌வும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம், இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Crime News, Thanjavur