ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

தஞ்சாவூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் கடந்த பல நாட்களாக அதிக அளவில் மின்தடை ஏற்படுகிறது.

இதன் படி நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தஞ்சை மாநகர மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அண்ணாநகர் மின்பாதையில், யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்தம்மாள் நகர், பிலோமினாநகர், காத்தூன்நகர் சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், மேரிஸ் கார்னர், மற்றும் திருச்சி சாலை ராமகிருஷ்ணாபுரம், அருளானந்த நகர், வ உ சி நகர், பூக்கார தெரு, 20 கண் பாலம், கோரிக் குளம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல மங்களபுரம், கணபதி நகர், ராஜபாளையம், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே ஜே நகர், டி பி எஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் பாதையில், எஸ்சி அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவிரி நகர், நிர்மலா நகர், என் எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம் தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர் கூட்டுறவு காலனி, ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur