முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் திருமலை சமுத்திரம் ஜல்லிக்கட்டு.. அடம் பிடித்த காளைகளை அடக்கி ஆண்ட விரர்கள்..!

தஞ்சாவூர் திருமலை சமுத்திரம் ஜல்லிக்கட்டு.. அடம் பிடித்த காளைகளை அடக்கி ஆண்ட விரர்கள்..!

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

thanjavur jallikattu | தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் நேற்று காலை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சி வடக்குக்குளத் தெரு திடலில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழியை வாசிக்க மாடு பிடிக்கும் வீரர்கள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். தஞ்சை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 12 சுற்றுகளாக போட்டி நடந்தது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்த வீரர்களுக்கு மட்டுமே களத்தில் இறங்க அனுமதி அளிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாகப் பட்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில் 500க்கும் அதிகமான போலீசார் செய்திருந்தனர். இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திருமலை சமுத்திரம் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

களத்தில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு அண்டா, குடம், கட்டில், சேர் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பாரி வள்ளல் ஜல்லிக்கட்டு பேரவையினர் செய்திருந்தனர். அதிக மாடுகளை பிடித்த திருக்கானூர்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் என்ற வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 13 பேர், பார்வையாளர்கள் 5 பேர் என மொத்தம் 35 பேர் காயமடைந்தனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Thanjavur