Home /thanjavur /

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. நியூட்டனுக்கு முன்னோடியான தமிழனின் அறிவியல் ஞானம்..

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. நியூட்டனுக்கு முன்னோடியான தமிழனின் அறிவியல் ஞானம்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

Thanjavur Thalaiyatti Bommai : தஞ்சாவூரில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தலையாட்டி பொம்மை அதன் மணிமகுடமாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தஞ்சை தலையாட்டி பொம்மை என்பது ராஜா, ராணியை குறிக்கும். இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் எடை மிகுந்ததாகவும் மேல் பகுதி எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுவதால், இந்த பொம்மைகளை சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும்.

ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிவதற்கு முன்னரே இந்த பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தமிழருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவை வெறும் கூழ் மற்றும் களிமண்ணின் கலவை அல்ல. இது பண்டைய தமிழரின் அறிவியலும் ஆகும்.

மேலும் தலையாட்டி பொம்மை உற்பத்தியை பரம்பரை தொழிலாக கொண்டிருக்கும் தஞ்சை வடக்கு வாசல் பாலுவிடம்
விசாரித்தபோது, அவர் தலையாட்டி பொம்மை தயாரிப்பு குறித்து விரிவாகத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை


தலையாட்டி பொம்மை தயாரிக்கும் முறை:

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் பேப்பர் (மரம்) கூழ், நாம் சாப்பிடும் மரவள்ளி கிழங்கு மாவுடன் 1:3 என்ற விகிதத்தில் மூழ்கடித்து, அவை பூரி மாவு போல் மாவாக கட்டுப்படுத்திய பின்பு அந்த மாவானது கைகளில் ஒட்டாத நிலை வந்த பிறகு, அதனை பூரி மாவு போல் தேய்த்து அச்சுகளில் வைத்து உருவாக்குவதாகவும், ஆனால் அந்த காலகட்டத்தில் அச்சுகள் பயண்படுத்தாமல் கைகளிலேயே அச்சு வேலைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாகும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை


பிறகு சிலைகள் சாயம் பூசப்பட்டு, அரை மணி நேரம் நிழலில் உலர வைக்கப்பட்டு பின்னர், சாய வார்ப்பு காகிதங்களுடன் சிலை ஒட்டப்பட்டு ஒன்றரை மணிநேரம் சென்ற பிறகு, பொம்மைகளின் இரண்டு பகுதிகள் சரி செய்யப்பட்டும் அதன் பிறகு பொம்மைக்கு ஒரு கோட் மாவு பூசப்பட்டு அதன் பிறகே பொம்மையின் இடைவெளி மூடப்படும்.

பின்னர், கீழே களிமண் சேர்க்கப்பட்டும் அது உலர்ந்த பின்பு, பொம்மை வர்ணம் பூசப்பட்ட பிறகு பொம்மை தட்டில் இறுதித் தொடுதல் கொடுக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன.

அதன்பின் உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண் கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன என கூறினார்.

தயாரிக்க ஆகும் காலம் மற்றும் விற்கும் முறை:

தஞ்சாவூர் பொம்மை தயாரிக்க கிட்டத்தட்ட ஒரு 3 நாட்கள் ஆவதாகவும் வியாபாரிகள் வந்து எங்களிடம் மொத்தமாக வாங்குவதாகவும், அதனை தஞ்சை பெரிய கோவில் வாசல் மற்றும் உள்ளே இருக்கும் கலை பொருள் கூடத்திலும் தஞ்சையில் பல்வேறு இடங்களிலும் விற்க்கபடுவதாகவும் பாலுகூறினார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை


விலை மற்றும் விற்பனை செய்யப்பட்டும் முறை:

தலையாட்டி பொம்மைகள் வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை விலையாக ஒரு ஜோடி பொம்மைகள் 150ரூ. முதல் 200 ரூ வரை விற்கப்படுகிறது.பொம்மையின் அளவை பொருத்து விலை மாறுபடும்

தலையாட்டி பொம்மைகள் விற்பனை, தயாரிப்பு முறை அல்லது கூடுதல் தகவல்களுக்கு பாலுவை தொடர்பு கொள்ளலாம்..

முகவரி:

சுண்ணாம்பு கால்வாய் ரோடு, வடக்கு வாசல், தஞ்சாவூர்.

தொலைபேசி:  87786 56293

கூகுள் மேப்பில் செல்லும் வழி:
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி