முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் | கோனூர் நாடு 18 கிராமத்துக்கு சொந்தமான கோவிலில் தைப் பூச விழா- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் | கோனூர் நாடு 18 கிராமத்துக்கு சொந்தமான கோவிலில் தைப் பூச விழா- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

தைப் பூச விழா

தைப் பூச விழா

Thanjavur | கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் தை பூச விழா சிறப்பாக நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் மாணிக்க வாசகர் கோவிலில் தை பூச திருவிழாவையொட்டி முருகன் மற்றும் வினாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.

வடக்கூர் கிராமத்தில் உள்ள மாணிக்க வாசகர் திருக்கோயில் கோனூர் நாட்டைச் சேர்ந்த 18 கிராமத்திற்கும் இக்கோயில் மிகவும் பிரசி பெற்றதாகும்.

18 ஊரைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எந்த நல்ல காரியங்கள் என்றாலும், எந்த பரிச்சனை என்றாலும், இக்கோயில் வந்து தவறாமல் வழிபடுவது வழக்கம்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி, சிவராத்திரி போன்ற அனைத்து விஷேஷத் திருவிழாவும் வெகுவாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த மாணிக்க வாசகர் திருக்கோயில் தை பூச விழா நடைபெற்றது வருகிறது.

மதியம் 12 மணி தொடங்கி வழிபாட்டு பூஜைகளில் முருகன் மற்றும் வினாயகர் சிலைக்கு எண்ணெய், நெய், பால், சந்தனம், திருநீறு, பன்னீர், பழச்சாறு ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாட்டு பூஜைகளும் நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பூஜைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகர் மற்றும் வினயாகரின் அருள் பெற்றனர். பிறகு சுமார் 2,500 பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur