முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தஞ்சை டாஸ்மாக்கில் மது குடித்து 2 பேர் பலி: அதே பாரில் மது குடித்தவர்களுக்கு வலை வீசும் போலீசார்!

தஞ்சை டாஸ்மாக்கில் மது குடித்து 2 பேர் பலி: அதே பாரில் மது குடித்தவர்களுக்கு வலை வீசும் போலீசார்!

சம்பவம் நடைபெற்ற மது பார்

சம்பவம் நடைபெற்ற மது பார்

தஞ்சை மாநகரத்தில் சயனைடு புழங்குகின்ற இடங்களில் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், இவர்களை போலவே அதே பாரில் மது குடித்த  20 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கீழவாசலில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்த குப்புசாமி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே மதுபான பாரில் மது விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் மாதிரிகளை காவல்துறையினர் சேகரித்து தடயவியல் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்திருந்தார். எனினும் இரண்டு பேரின் மரணத்திற்கு உரிய காரணம் தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 7 மணி தொடர்ந்த பேச்சுவார்த்தையில் காவல்துறையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தையடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையும் படிங்க: மண்ணிலே ஈரமுண்டு.. இலவசமாக வாதாடும் வழக்கறிஞர்.. நிஜத்தில் ஒரு ஜெய்பீம் கதை!

இதற்கிடையே மது விற்பனை செய்த பாரில் ஒரு பெட்டியில் 24மது பாட்டில்கள் பாதி இருந்துள்ளது. இதில் ஒன்றை வாங்கி குடித்து தான் குப்புசாமியும், விவேக்கும் உயிரிழந்துள்ளனர். இவர்களும் ஆளுக்கு ஒரு கட்டிங் மட்டுமே குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மீதம் இருந்த 2 கட்டிங்கள் உட்பட, 5 பாட்டில்களை வாங்கி, 20 பேர் 'கட்டிங்' போட்டுள்ளனர். 18 பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில், 'கட்டிங்' குடித்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

top videos

    இதனையடுத்து மதுவில் சயனைடு என்ற கொடூர விஷம் இருந்ததாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. நகைப்பட்டறைகளில் மட்டுமே சயனைடு பயன்படுத்தப்படும். எனவே, தஞ்சை மாநகரத்தில் சயனைடு புழங்குகின்ற, தெற்கு வீதி, காசுக்கடை சந்து, எல்லையம்மன் கோயில் பகுதிகளில் உள்ள நகைப்பட்டறைகளில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Thanjavur