Home /thanjavur /

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 50% தள்ளுபடியில் புத்தக விற்பனை- வாங்கி பயன்பெற துணைவேந்தர் அழைப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 50% தள்ளுபடியில் புத்தக விற்பனை- வாங்கி பயன்பெற துணைவேந்தர் அழைப்பு

தஞ்சைப்

தஞ்சைப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
செம்மொழியாகிய தமிழுக்கு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசால் கடந்த 1981-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது தஞ்சைப் தமிழ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பல்கலைக்கழக நூலகம்.

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் 1983-2022 வரை 500- க்கும் மேற்பட்ட நூல்களை தமிழை அலங்கரிக்கும் வகையில் பல்கலைக்கழகம் பதிபித்து வெளியிட்டுள்ளது.

இங்கு, பொதுவாக அறிவார்ந்த நூல்களை படித்து மேம்பட ஆராய்ந்து நூல்கள் வெளியிடப்படுகிறது. சிறுவர்- முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற நூல்கள், மொழி சார்ந்த பண்பாடு சார்ந்த நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அறிவியல் களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் பல பகுதிகளாக அடங்கி இருக்கின்றது.

தென்னிந்திய குலங்கள் புத்தகம்


மேலும் தென் இந்திய குலங்களும் குடிகளும், என்கிற நூலின் மொழி பெயர்ப்பு, சாதாரண மனிதர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவராலும் விரும்பி படிக்கத் தூண்டுகிறது. இது போன்று எண்ணற்ற வகையான நூல்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம்


இதுகுறித்து பேசிய தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர், திருவள்ளுவன், ‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 527 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் 12-வது ஐந்தாண்டு திட்ட நிதியில் 2021-ம் ஆண்டில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. பதிப்புத்துறை வெளியீடுகளில் 216 நூல்களை மறு அச்சு செய்வதற்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி வழங்கியது.

இதற்கான அச்சுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 23 நூல்களின் அச்சாக்கம் நிறைவடைந்து வெளியிடப்பட்டுள்ளன.  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி இப்பல்கலைக்கழகத்தில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 14-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த சிறப்பு விற்பனையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி