ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை தமிழ் பல்கலை பட்டமளிப்பு விழா- விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால நீட்டிப்பு

தஞ்சை தமிழ் பல்கலை பட்டமளிப்பு விழா- விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால நீட்டிப்பு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோர் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thanjavur, India

  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோர் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தஞ்சாவூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சி. தியாகராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘13ம் பட்டமளிப்பு விழா தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டம் பெற தகுதியுடையவர்கள் முனைவா் பட்டம், ஆய்வியல் நிறைஞா் பட்டம், முதுகலை, முது அறிவியல், இளங்கல்வியியல், கல்வியியல்

  நிறைஞா் பட்டம் பெறத் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பம் அளிக்க வேண்டிய இறுதி நாள் ஜூன் 27 ஆம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

  மேற்கண்ட படிப்புகளுக்கு பட்டம் பெற தகுதியுடையோர்கள் தாமதக் கட்டணத்துடன் சேர்த்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டம் பெற தகுதியுடைய மாணவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Thanjavur