தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 26ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்துக்குமான இழப்பு, இந்த இழப்பினால் அந்த குடும்பத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப்புக்காகவும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். வருகிற 26ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
எனவே, பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட்டினை பயன்படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helmet, Local News, Thanjavur, Two Wheeler