தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள், நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov. in மூலம் வரவேற்கப்படுகிறது.
குறைந்தபட்ச தகுதியானது சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2ஆம் இடம், 3ஆம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண் டும்.
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப் பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இனி இங்கு முகக்கவசம் அணியாமல் உள்ளே நுழையவே முடியாது..!
கடைசி நாள் :
வயது வரம்பானது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளை யாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளை யாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத் தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இணையதளம் மூலம் விண்ணப்பிக்ககடைசி நாள் இந்த மாதம் (ஏப்ரல்) 19ஆம்தேதி மாலை 5 மணியாகும். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளை யாட்டுமேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur