Home /thanjavur /

தஞ்சையில் செப். 2-ம் தேதிவரை தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சையில் செப். 2-ம் தேதிவரை தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 2-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சையில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு நிதிக் கழகம், தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் சார்பில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    தற்போது, தஞ்சாவூர் கிளை அலுவலகம் (No.2854, NGK அபார்ட்மெண்ட், நாஞ்சிக்கோட்டை ரோடு பழைய அருள் தியேட்டர் எதிரில், தஞ்சாவூர்- 613001 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இந்த முகாம் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது.

    புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் இதைப் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04362- 274230, 230465, 9789610260, 9442540854 என்ற என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள்(மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி