Home /thanjavur /

குப்பைகள் குவிந்து அசுத்தமான நிலையில் தஞ்சையின் தெற்கு வீதி சாலை

குப்பைகள் குவிந்து அசுத்தமான நிலையில் தஞ்சையின் தெற்கு வீதி சாலை

அசுத்தமான நிலையில் சாலை

அசுத்தமான நிலையில் சாலை

தஞ்சாவூரின் தெற்கு வீதி சாலை முழுவதும் குப்பைகள் தேங்கி மோசமான நிலையில் உள்ளது.

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்கு தேவையான அனைத்து வகையான பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் தஞ்சை தெற்கு வீதி சாலை முழுவதும் துர்நாற்றம் வீசக்கூடிய அசத்தமற்ற நிலையில் காணப்படுகிறது.

தஞ்சையில் தெற்கு வீதி மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். இந்த வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் கோயில்கள், வங்கிகள் ‌இருக்கின்றன.

இப்பகுதியில் உள்ள சாலையை அதிக அளவிலான வாகன ஓட்டிகளும் மக்களும் பயன்படுத்துவதால், இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அசுத்தமான நிலையில் சாலை


இந்நிலையில் இப்பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளதால், கழிவு நீர் சாலையிலும் திறந்த வெளியிலும் தேங்கி நிற்கிறது. அதனால் தெற்கு வீதி முழுவதும் துர்நாற்றம் வீசி அசுத்தமற்ற நிலையில் காணப்படுகிறது.

மேலும் சில கால்வாய்கள் மண்களைப் போட்டு மூடப்பட்டுள்ள நிலையில், கோயில்கள் மற்றும் கடைவீதிகளின் வெளியே உள்ள கழிவு நீர் கால்வாய்களில் கழிவுநீர் திறந்த வெளியில் தேங்கி நிற்கிறது.

மேலும், குப்பைகள் இப்பகுதியில் அதிக அளவில் விரைவில் சேர்வதால் குப்பை சூழ்ந்தும் காணப்படுகிறது. இப்பகுதியில் சேரும் குப்பைகள் காலம் தாழ்த்தியே அகற்றப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, ‘இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிக அளவில் இருக்கின்றது எனவும் இந்த குப்பைகளை காலம் தாழ்த்தியே அகற்றுவதால் குப்பைகள் நிரம்பி ரோடு முழுவதும் பரவி காணப்படுகிறது. அதனால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று கூறினார்கள். மேலும் விரைவில் இந்த கழிவு நீர் கால்வாய்களை சரி செய்ய வேண்டும் எனவும், இது போன்ற குப்பைகளைக் காலம் தாழ்த்தாமல் அகற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி