ஹோம் /தஞ்சாவூர் /

சுகாதார சீர்கேடாக மாறிவரும் தஞ்சை தெற்கு வீதி- சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

சுகாதார சீர்கேடாக மாறிவரும் தஞ்சை தெற்கு வீதி- சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

திறந்த

திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை

Thanjavur | தஞ்சாவூர் தெற்கு வீதி முழுவதும் கழிவுநீர் தேங்கும் அளவுக்கு சீர்கேடாக மாறிவருவதால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை தெற்கு வீதியில் பல மாதங்களாக மழைநீர் வடிகால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், தெற்கு வீதி முழுவதும் சீர்கேடான பகுதியாக மாறியுள்ளது.

தஞ்சை தெற்கு வீதியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசின் இடத்தில் இருந்த பல கடைகளின் முன்பகுதிகள் அகற்றப்பட்டன.

மழைநீர், கழிவுநீர் செல்வதற்காக தெற்கு வீதி முழுவதும் சுமார் 1.5 கி.மீ தூரம் வரையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த வேலை கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது மழைக் காலம் தொடங்கியதால் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து வடிகாலில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, கடைகள் இருக்கும் முன் பகுதியிலேயே தெற்கு வீதி பகுதி முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது.

திறந்த நிலையில் சாக்கடை

இதனால் பொது மக்களுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கடை உரிமையாளர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் குப்பைகளை சரிவர அகற்றப்படாததால் நாய்கள் குப்பைகளை ரோட்டில் இழுத்து சாலையை அசுத்தப்படுத்துகிறது.

திறந்த நிலையில் சாக்கடை

மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பின்புறம் இருக்கும் இந்த தெற்கு வீதி பகுதியானது பேங்க், மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அதிகம் உள்ளதால் எந்நேரமும் பரப்பரபாக உள்ள இடமாகும். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் அவதிக்கு ஆளாகின்றனர்.

திறந்த நிலையில் சாக்கடை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வடிகால் சீரமைக்கும் பணி 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட‌ நிலையில் தற்போது வேலை அலட்சியமாக மிக மெதுவாக நடக்கிறது. இரவு நேரங்களில் கொசு, பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. சுகாதார சீர்கேடாக மாறி வரும் இந்த பகுதியை மிக விரைவாக சீரமைத்து குப்பைகளை தினமும் வந்து அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur