ஹோம் /தஞ்சாவூர் /

சார்.. எப்ப ரோடு போடுவீங்க? குண்டும் குழியுமான சாலையால் அவதிப்படும் தஞ்சை மக்கள்!

சார்.. எப்ப ரோடு போடுவீங்க? குண்டும் குழியுமான சாலையால் அவதிப்படும் தஞ்சை மக்கள்!

X
சீரமைப்படாத

சீரமைப்படாத சாலை 

Thanjavur | தஞ்சாவூர் மாவட்டம் சிங்கப்பெருமாள் குளம் பகுதியில் சாலை வசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சையை அடுத்த சிங்கப்பெருமாள் குளம் பகுதியில், ரெட்டிபாளையம் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர், சாலையிலும் வீடுகளிலும் தேங்கி நிற்கும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்குசற்று தொலைவில் சிங்கபெருமாள் குளம் பகுதி அமைந்துள்ளது.இப்பகுதியில் உள்ள ரெட்டிபாளயம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது கற்கல் பெயர்ந்துமோசமான நிலையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மணிநேர மழைக்கே தண்ணீர் குளம் போல் சாலை முழுவதும் தேங்கி வருகிறது.

ALSO READ | சிந்தையை மயக்கும் தஞ்சை ஓவியங்கள் உருவாவது எப்படி?  

வடிகால் வசதி இல்லை:

இப்பகுதியில் இதுவரை வடிகால் வசதி இல்லாமல் இருக்கிறது. மழை பெய்தால் மழை நீர் செல்ல வடிகால் இல்லாததால் சாலையிலேயே நின்று விடுகிறது. மேலும் சாலையின் ஓரத்தில்இருக்கும் வீடுகளிலும் மழை நீர் சென்று விடுகிறது.இப்பகுதி வழியே அதிக அளவிலான போக்குவரத்தும் இருக்கும் நிலையில் மழை காலங்களில் பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த கால தாமதம் ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Road accident, Thanjavur