முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..

தஞ்சை ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..

X
தஞ்சை

தஞ்சை ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Thanjavur News | தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதையொட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர், முளைப்பாரி, புனித மண் ஆகியவை கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகி கருணாநிதி தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

மேலும் ஊர்வலத்தில் சண்முகம், நடராஜன், செல்வம், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் ,சுகுமார், செல்லத்துரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 3 கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பட்டாகி விமானம் குடமுழுக்கும், அதனைத்தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தகோடிகள் “ஓம் சக்தி ஓம் சக்தி” என்று கோஷம் செய்து பயபக்தியுடன் ராஜராஜேஸ்வரி அருளை பெற்றனர்.

தொடர்ந்து, தஞ்சை அடுத்துள்ள தில்லை ஸ்தானத்தை சேர்ந்த துரைராஜன் சிவாரக் சிவாச்சாரியார் குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். பின்னர் மகா தீபாரதனை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், பாரத் கல்வி குமும செயலாளர் புனிதா கணேசன், கமிட்டி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிவக்குமார், தினகரன், முருகப்பன், சுப்புராயன், மணிகண்டன், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு, ஜெயராமன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெருவாசிகள் கிராம மக்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur