தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, அங்காங்கே ரெட் சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படுவது போன்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகளும் நடந்து வருகிறது. தஞ்சையில் ஐடி பார்க், மால் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பல பொழுதுபோக்கு இடங்களும் வர இருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் வாகன ஓட்டிகளின் வரத்தும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தஞ்சையின் முக்கிய பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், பல இடங்களில் ட்ராபிக் சிக்னல்களும் வைக்கப்படமாலயே இருக்கிறது. இதனால் விபத்துகளும் அதிக அளவில் நடந்து வருகிறது. முக்கியமாக நாஞ்சிக்கோட்டை சாலை, பர்வீன் தியேட்டர், யாகப்பா நகர், குழந்தை இயேசு கோயில், காவேரி நகர், நியூ பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் ரோடு, சுந்தரம் பெயிண்ட்ஸ், முனிசிபல் காலனி, பிள்ளையார்பட்டி ரவுண்டானா, எல்ஐசி காலனி, கணபதி நகர்,தொம்பன் குடிசை, பள்ளி அக்கரகாரம். இப்பகுதிகள் அனைத்துமே தஞ்சை நகரின் மிக மிக முக்கிய பகுதியாகும்.
வாகன ஓட்டிகள் அதிகம் சென்று வரும் பரபரப்பான சாலையாக இருக்கும் நிலையில், இப்பகுதிகளில் ட்ராபிக் சிக்னல் வைத்தால் விபத்து ஏற்படுவதை தடுக்கலாம் எனவே ட்ராஃபிக் சிக்னல்கள் வைக்கப்படுமா என தஞ்சை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்..
இதுகுறித்து பேசிய தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் வைப்பதும், டிராபிக் சிக்னல்கள் வைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சைக்கு டிராபிக் சைக்கிள் மிக முக்கியமாக இருக்கும் நிலையில் மாநகராட்சி கையில் இந்த திட்டம் மாறி உள்ளது எனவே ஒரிரு மாதங்களில் தஞ்சையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் டிராபிக் சிக்னல்களும் வைக்கப்படும் என்று கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur, Traffic