தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதற்கும் நம் பாரம்பரிய கலைகளை காக்கவும் அரசு விளையாட்டு துறைகளுக்கு அறிவித்த 3% இட ஒதுக்கீடுகளுக்காவும் தங்கள் பிள்ளைகள் விளையாட்டில் சிறந்த ஆளாக வருவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள பல அகாடமிகளில் சேர்த்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பையும் தாண்டி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமை பெற்ற மாணவர்களாக திகழ்கின்றனர்.
இந்த பயிற்சிகளை கொடுக்கும் பல அகாடமிகளும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தஞ்சையிலும் பல அகாடமிகள் பயிற்சி அளித்து வரும் நிலையில் ரிதன் பிரின்சி விக்டரி அகாடமியும் அடுத்த தலைமுறையினருக்கு கலைகளை கற்றுக் கொடுக்கும் நோக்கில் கராத்தே, சிலம்பம், மான் கொம்பு, வாள், தொடுமுறை, சுருள் வாழ் போன்ற சில பயிற்சிகளை அளித்துவருகிறது. இதை ஒரு தொண்டாகவும் செய்து வருகிறது.
சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் இந்த அகாடமயில் வசதி இல்லாத மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இன்றி கலையை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
இதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிலிருந்து 60 வயது வரை உள்ளவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் மாவட்ட, மாநில சர்வதேச போட்டிகளிலும் கூட பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். தற்போது கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இந்த ரேதன் பிரின்சி விக்டரி அகாடமி மாணவர்கள் 271 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளனர். இதில் முக்கியமாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் அர்ஜுன் கூறுகையில், ‘கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்கள் கராத்தே, சிலம்பம் போன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு அதிகளவில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கலைகளை மிகவும் திறம்பட கற்றுக் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் பல மாணவர்கள் சர்வதேச போட்டிகளிலும் கூட பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
வசதி இல்லாத மாணவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்து அவர்களையும் சர்வதேச போட்டிகளிலும் கூட பங்கேற்ற வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது’ என்று தெரிவித்தார்.
தற்காப்பு கலை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு 90956 05402 என்ற எண்ணில் ரிதன் அகாடமியை தொடர்பு கொள்ளலாம்..
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur