முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..! 

தஞ்சை முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..! 

தஞ்சை மின்தடை பகுதிகள்  

தஞ்சை மின்தடை பகுதிகள்  

தஞ்சையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09-05-2023) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் நாளை (9-ம் தேதி) செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். தஞ்சையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (9-ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மனிகம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஏ.எஸ்.அன்பழகன் நகர், எஸ்.ஏ.ஆனந்தம் நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத் தெரு, பெரியத்தெரு, ஜெகநாதன் நகர், வடுகத்தெரு, ராஜராஜ சோழன் நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்ரஹாரம் கடைத் தெரு, டைபாஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் கரந்தை மின் வழித்தடத்தில் உள்ள கங்காநகர், புண்ணிய மூர்த்தி தோட்டம், அழகப்பா ரைஸ்மில், சிரேஷ்சந்திரம் ரோடு, வடக்கு வாசல், சத்தியா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்கட்டித் தெரு, கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tanjore