Home /thanjavur /

உலக நாடுகளுக்கு திசை காட்டும் தஞ்சாவூர் பெட்ரோல் பங்க்- நேரில் பாத்தா ஆச்சர்யப்படுவீங்க...

உலக நாடுகளுக்கு திசை காட்டும் தஞ்சாவூர் பெட்ரோல் பங்க்- நேரில் பாத்தா ஆச்சர்யப்படுவீங்க...

பெட்ரோல்

பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டுள்ள திசைகாட்டி

தஞ்சாவூரிலுள்ள பெட்ரோல் பங்கில் உலக நாடுகள் அமைந்துள்ள திசைகளைக் காட்டும் திசைக் காட்டி வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
உலக நாடுகள் இருப்பதற்கான திசை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி நாளிதழ், புத்தகங்கள் இது போன்று வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது தஞ்சாவூரிலுள்ள பெட்ரோல் பங்க்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உரந்தைராயன் குடிகாடு கிராமத்தில் தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது HP பெட்ரோல் பங்க். பெட்ரோல் விற்பனையும் தான்டி மக்களுக்கு சில பயனுள்ள செயல்களை செய்து வருகிறது இந்த பெட்ரோல் பங்க்.

அதில் முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு
தினசரி காலை செய்தி நாளிதழ், புத்தகங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான காற்றோட்டமான உணவகம், குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு ஊஞ்சல், சறுக்கு மரம், போன்றவை இயற்கை சூழந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள திசைகாட்டி


மேலும் தஞ்சை விவசாய பூமியாக இருப்பதால் விவசாயிகளை நினைவூட்டும் வகையில் நமது பாரம்பரிய மாட்டு வண்டியும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கிலுள்ள உணவகம்


மேலும் இந்த பெட்ரோல் பங்கிலிருந்து உலகின் முக்கிய 20 நாடுகள் எந்த திசையில் அமைந்துள்ளது மற்றும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதன் தூரம் கி.மீ. மற்றும் மைல் இரண்டு அளவுகளிலும் நீண்ட பலகை மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள திசைகாட்டி


இதை பார்க்கும் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் சற்று வியப்புடனே பார்த்து சிந்தனை செய்கிறார்கள். இது போன்று புத்தகங்கள், திசைகள் அமைத்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் இருப்பதால் மக்களிடையே இந்த பெட்ரோல் பங்க் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுகுறித்து இந்த HP பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களுடைய, குடும்பத்தினரோ, உறவினரோ, வெளிநாடுகளில் இருப்பார்கள். ஆனால் எந்த திசையில் இருப்பார்கள் என்று பலருக்கும் தெரியாது. இதை பார்க்கும் போது, அதை தெரிந்து கொள்வது மட்டுமின்றி "இந்த திசையில் தான் இருக்காங்களா என்று ஒரு பிரமிப்பான மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள். ஜி.பி.எஸ்‌ மூலம் முக்கியமான 20 நாடுகளை சரியான திசையில் அமைந்துள்ளதாக கூறினார். மேலும் இது போன்று தொழிலை தாண்டியும் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை செய்ய இருப்பதாகவும் கூறினார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி