Home /thanjavur /

பெரிய கோயில் பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்- திரளாக பங்கேற்ற பக்தர்கள்

பெரிய கோயில் பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்- திரளாக பங்கேற்ற பக்தர்கள்

தஞ்சாவூர் பெரிய கோவில் விழா

தஞ்சாவூர் பெரிய கோவில் விழா

தஞ்சை பெரிய கோவிலில் பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தஞ்சை மாநகரின் சிறப்பிற்கு பெருவுடையார் கோயிலே முக்கிய காரணம். இந்த தஞ்சை பெரிய கோயிலில் 10 க்கும் மேற்பட்ட அம்மன்கள் உள்ளன.கடந்த வாரத்தில் வாராஹி அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று மாலை பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் பெரிய நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம் உள்ளது.

திருக்கல்யாணம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கலந்துகொள்ளாமல் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் கலந்து கொண்ட திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, குங்குமச்சிமிழ், கிழங்கு, பழங்கள், தாம்பூலம், வளையல், சீப்பு, கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்கநாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் கூகுள் மேப்



தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி