Home /thanjavur /

Thanjavur | 3 மாதங்களாக கிடப்பிலிருக்கும் கருணாவதி நகர்- அண்ணா நகர் சாலைப் பணி- பொதுமக்கள் அவதி

Thanjavur | 3 மாதங்களாக கிடப்பிலிருக்கும் கருணாவதி நகர்- அண்ணா நகர் சாலைப் பணி- பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் சாலைப் பணி

தஞ்சாவூர் சாலைப் பணி

Thanjavur | தஞ்சாவூர் கருணாவதி நகர்- அண்ணா நகர் சாலைப் பணிகள் 3 மாதங்களாக முடியாமல் கிடப்பில் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக தஞ்சை முழுவதும், பல இடங்களில் சாலை பணிகள் நடந்து வரும்நிலையில் பல சாலை பணிகள் முடிக்கப்பட்டும் முடிக்கப்படாமலும் இருக்கின்றது.

அதில் முக்கியமாக தஞ்சை கருணாவதி நகரிலிருந்து அண்ணா நகர் வரை சாலை பணிகள் தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் ஏற்கனவே இருந்த சாலைகள் தகர்க்கப்பட்டு புதுசாலை போடுவதற்காக கற்களும்
சிமெண்டுகளும் சாலையின் மேல் போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகளை முடிக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தஞ்சாவூர் சாலைப் பணி


மேலும் அப்பகுதியில் அதிக அளவில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பலர் இச்சாலையில் காலை நேரங்களில் அதிக அளவில் செல்வதால், கிடப்பில் போடப்பட்ட சாலையின் கற்களும், சிமெண்டும் புழுதி பறக்க அதிக அளவில் அடித்து புகை சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் இருக்கும் கடைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் சாலைப் பணி


மேலும் அப்பகுதி முழுவதும் காற்று மாசுபாடானது ஏற்படுகிறது. கற்கள் அதிக அளவில் சிதறப்பட்டு கிடப்பதால் சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றது.

தஞ்சாவூர் சாலைப் பணி


இதுகுறித்த அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ‘தஞ்சை முழுவதும் பல இடங்களில் சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சாலை ஒப்பந்தக்காரர்களால் ‌பல இடங்களில் சாலையானது கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமாக இந்த கருணாவதி நகர், EB காலனி, அண்ணா நகர் இப்பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட சாலையால் மிகவும் சிரமமாக இருக்கின்றது. முக்கியமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலை சென்று வருபவர்கள் ‌அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் மேலும் உணவகங்களில் செய்யப்படும் உணவுகள் வரை இந்த புழுதியானது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சாலை பணிகளை முடிந்தளவில் விரைவில் முடித்தால் இந்த புகையால் வரும் அலர்ஜி களிலிருந்து தப்பிப்போம் என‌ கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி