2022 -ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை பொதுமக்களிடம் 2022 எப்படி சென்றது? 2023 எப்படி இருக்கும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்ன? என்பது பற்றிய சுவாரஸ்யமான கேள்விகளை தஞ்சை மக்களிடம் கேட்டு தெரிந்துகொண்டோம்.
2022:
உலகையே வாட்டி வதைத்த கொரோனாவில் இருந்து இந்தியாவிற்கு சற்று விடுதலையான ஆண்டாக இருந்தது. வீட்டிலேயே முடங்கி கிடந்த பலரின் வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு வரத் தொடங்கியது. ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனையோ இன்பங்கள், துன்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து வந்து செல்வது வழக்கமான ஒன்றே. இந்தாண்டின் கடைசி நாளின் இறுதி இரவில் இந்த சில சுவாரஸ்யமான கேள்விகளை தஞ்சை மக்களிடம் கேட்டோம்.
பொதுமக்களின் கருத்து:
இந்த ஆண்டு எப்படி சென்றது? வரப்போகும் 2023 எப்படி இருக்க வேண்டும்? 2022-ல் உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த மறக்க முடியாத நிகழ்வுகள்? என்ன என்பதையும் தஞ்சை பொதுமக்களிடம் அதில் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பலர் கொரோனாவால் சற்று பாதிப்பு ஏற்பட்டாலும் நன்றாகத்தான் சென்றது என்றும் வர போகும் ஆண்டு இனிமையாக அனைவருக்கும் நல்லது நடக்கும் என்றும் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர்.
அதில் தஞ்சையை பொறுத்தவரையில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க படங்கள் வெளிவந்ததை அடுத்து பலருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வர வேண்டும் என்ற ஆவலும் எழுந்து பலர் வந்து கோயிலை பார்த்து ரசித்துசென்றனர், இதனால் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
“செம்பி படம் பார்த்துட்டு கண்ணுல தண்ணியோட தான் வருவீங்க” - தஞ்சை ரசிகர்களின் மூவி ரிவ்யூ
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் நிலையில் 2022 ல் பெரிய கோயிலுக்கு அதிக அளவிலான பொதுமக்கள் வந்த நிலையில் 2023-லும் இதே நிலை தொடரும் என்றும் ஒரு சிலர் அவர்களது கருத்தை கூறினர்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, New Year 2023, Thanjavur