ஹோம் /தஞ்சாவூர் /

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் நெட்டி கலையை காக்க வேண்டும் - கைவினை கலைஞர்கள் கோரிக்கை

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் நெட்டி கலையை காக்க வேண்டும் - கைவினை கலைஞர்கள் கோரிக்கை

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் நெட்டி கலை

Thanjavur Neti Art : தஞ்சாவூர் நெட்டிக் கலையைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

1,000 ஆண்டுகள் பழமையான நெட்டிக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேலைவாய்ப்பற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க வழி வகை செய்ய வேண்டும் என கைவினை கலைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் நெட்டி கலை:

நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு செடி.ஆயிரம் ஆண்டு காலங்களாக தஞ்சை மாவட்டத்தில்குளத்தில் வளரும் (நெட்டி) எனப்படும் தண்டை எடுத்து அதிலும் கலை பொருட்களை செய்துவருகின்றனர் தஞ்சை கைவினை கலைஞர்கள்:நெட்டி செடிகள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, நீர்நிலைகளில் விளையும்.

இதன் நடுப் பாகம் தாமரை தண்டு போல நீளமாகவும் மேல்பகுதி சிறு கிளைகளாகவும் இருக்கும். இதை உலர்த்தி வெயிலில் காய வைத்து தஞ்சை பெரிய கோயில்,யானை மேல் அமர்ந்திருக்கும் ராஜ ராஜ சோழன், நாற்காலியில் அமர்ந்தது போன்ற அண்ணல் அம்பேத்கர், ராமர், கிருஷ்ணர், போன்ற பல்வேறு உருவ அமைப்புகள் தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

தனிச்சிறப்பு :

வேறு எந்த ஒரு பொருள்களையும் சேர்க்காமல் முழுவதும் நெட்டியை மட்டுமே வைத்து செய்யப்படும், இந்த கலையின் பொருளானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வெண்மை தன்மை மாறாது.

இதையும் படிங்க : மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் - தஞ்சாவூரில் போக்குவரத்து மாற்றம்

எந்த ஒரு இயந்திரத்தையும் பயன்படுத்தாமல் முழுவதும் கைகளை மட்டுமே பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த நெட்டியானது ஆயிரம் ஆண்டு பழமையானதாககும்.

தற்போது இந்த நெட்டியை தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர்.

அழிந்து வரும் நெட்டி கலை :

ஆண்டு ஆண்டு காலமாகதஞ்சையில் இந்த கலையை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 250-க்கும் அதிகமானோர் செய்து வந்த நிலையில் தற்போது 100-க்கும் குறைவானோரே செய்து வருகின்றனர்.

காலம் செல்ல செல்ல இந்த கலை அழிந்து வருவதைநாம் கண்ணால் பார்க்க முடிகிறது. இந்த கலைநமக்கு மட்டும் தெரிந்தால்போதுமா? நமது அடுத்த தலைமுறையினரும் இப்படி ஒரு கலை உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் குறைவானோரே இந்த நெட்டி கலையை செய்துவருகின்றனர். தஞ்சை பகுதிகளில்ராதா எழில்விழி தம்பதியினராகிய இவர்களுக்கு நெட்டி கலைக்காக மத்திய அரசிடமிருந்து புவி சார் குறியீடும் கிடைத்துள்ளது.

இந்த நெட்டி கலையை காக்க என்ன செய்யலாம் என இவர்கள் கூறுகையில், ‘இதுகுறித்து அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம்.அதற்கு குழுக்களாக சேர்ந்து செய்யுங்கள் சில உதவிகளை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து இந்த தொழிலை செய்து வருகிறோம். எங்களால் அது போல ஒன்று சேர்ந்து செய்வதற்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால் தூரம் இருப்பதால் மட்டுமே.எனவே இதற்கு அரசு வேலை வாய்பற்றவர்களுக்கு இந்த கலையை பயிற்சி எடுக்க வழிவகை செய்தால் சரியாக இருக்கும். தஞ்சையில் தற்போது நாங்கள் ஒருவர் மட்டுமே செய்து வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அடுத்த தலைமுறையினருக்கு செல்லி கொடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம், எனவே நம் பாரம்பரிய கலையை வளர்பதோடு மட்டுமின்றி வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலையும் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு அரசு இந்த கலைத் தொழிலை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்

First published:

Tags: Local News, Tanjore