ஹோம் /தஞ்சாவூர் /

உயிர் அச்சத்தில் வண்டி ஓட்டுகிறோம்- தஞ்சை-நாகை மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

உயிர் அச்சத்தில் வண்டி ஓட்டுகிறோம்- தஞ்சை-நாகை மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

இருளில்

இருளில் தவிக்கும் பாலம்

Thanjavur | தஞ்சை- நாகை செல்லும் பாலத்தில் மின் விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இருளில் தவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை - நாகை செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் தினமும் விபத்துக்கள் நடக்கிறது. வேளாங்கண்ணி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாக தஞ்சை - நாகை பாலம் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பாக இருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியின் போது 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

இருளில் தவிக்கும் பாலம்

தற்போது இந்தப் பாலத்தின் இணைப்பு பட்டை சேதமடைந்த நிலையில் பல மாதங்களாக மின் விளக்குகளும் எரியவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் இப்பகுதியில் பல முறை விபத்துக்களும் நடந்துள்ளது.

இருளில் தவிக்கும் பாலம்

இதுகுறித்து பேசிய வாகன ஓட்டிகள், ‘தினமும் இந்தப் பகுதியில் தான் சென்று வருகிறோம். குடும்பத்துடன் வரும் பொழுது வாகனங்கள் கட்டுப்பாடு இன்றி வருவதால், பயத்துடனே கடந்த செல்ல வேண்டியுள்ளது. தயவு செய்து பாலத்தில் மின் விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur