ஹோம் /தஞ்சாவூர் /

அட குப்பைக்கிடங்கா..! சுற்றுலாதலமா.. வியக்க வைக்கும் வல்லம் பேரூராட்சி

அட குப்பைக்கிடங்கா..! சுற்றுலாதலமா.. வியக்க வைக்கும் வல்லம் பேரூராட்சி

X
வளம்

வளம் மீட்பு பூங்கா 

தஞ்சாவூரில் குப்பைக் கிடங்கை வளமான பூங்காவாக மாற்றியுள்ளது வல்லம் பேரூராட்சி நிர்வாகம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

குப்பைக் கிடங்கையும் வளம் செழிக்க வைத்துமாநிலத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது தஞ்சை வல்லம் பேரூராட்சி நிர்வாகம்.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. 15 வார்டுகள் கொண்ட இந்த பேரூராட்சியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது .

குப்பை கிடங்கு என்று சொன்னாலே மூக்கை பொத்திக் கொள்வார்கள். ஆனால் வல்லம் வளம் மீட்பு பூங்காவோ சுற்றுலாத்தலம் போல் உள்ளது. மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் தெரிவித்து பாராட்டியுள்ளார். இங்கு அப்படி என்னதாக நடக்கிறது.

இங்கு தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 4.23 டன். அதில் 2.54 டன் மக்கும் குப்பையும் 1.04 டன் மக்காத குப்பையும் 0.65 டன் வடிகால் மண் சேகரம் செய்யப்படுகிறது.தூய்மை பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கை அமைத்துஅதில் EM Solution தெளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கை மாற்றி அமைக்கப்படுகிறது. மூன்று முறை இதுபோல் மாற்றி அமைக்கப்பட்டு 45 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகள் சலிக்கப்படுகின்றன. அருமையான இயற்கை உரம் தயார். இந்த இயற்கை உரங்கள்மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : அழகி போட்டியில் ஒய்யார நடைபோட்ட இளம்பெண்கள்..! கோவையில் அழகிகளின் அணிவகுப்பு!

இதே போல் 30 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகள்மண்புழு உர தொட்டிற்கு மாற்றப்பட்டு அதில் மென்மையான காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள் தெளிக்கப்பட்டு 15 நாட்கள் பிறகு மண் புழுவின் கழிவுகள் மேல்தளத்தில் உள்ளதை சேகரம் செய்து மண்புழு உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை மரங்கள் இயற்கை உரம் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. காய்கறி செடிகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்காத திடக்கழிவுகளில் நெகிழி, பேப்பர், அட்டைகள், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகிய மறுசுழற்சி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சுயஉதவி குழு பணியாளர்களுக்கு தொகை பிரித்து வழங்கப்படுகிறது. மாடுகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மீன்கள் வளர்க்க குளம் அமைக்கப்பட்டு பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் கோழி கழிவுகள் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. இப்படி குப்பைக்கிடங்கையும் வளம் கொழிக்கும் வளம் மீட்பு பூங்காவாக மாற்றி உள்ளனர் வல்லம் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

First published:

Tags: Local News, Tamil News, Thanjavur